செஃபாலீ ஷா (Shefali shah பிறப்பு: ஜூலை 20, 1972), இவர் இந்திய நடிகை ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கிறார்.[1][2] 1995 நாடகத் திரைப்படமான ரங்கீலாவில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமான பிறகு, சத்யா படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்தார். சத்யா படத்தில் அவரது நடிப்புக்காகப் பாராட்டுக்களைப் பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் (விமர்சகர்) விருது பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான 44வது பிலிம்பேர் விருதுகளில் பெற்றார். குடும்ப நாடகத் திரைப்படமான வக்த்: த ரேஸ் அகெய்ன்ஸ்ட் டைம் (2005) இல் அவரது நடிப்பிற்காகச் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

செஃபாலீ ஷா
பிறப்புசெஃபாலீ ஷெட்டி
20 சூலை 1972 (1972-07-20) (அகவை 52)
மும்பை, இந்தியா இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்பொழுதுவரை
வாழ்க்கைத்
துணை
ஹர்ஷா
(தி. 1997; ம.மு. 2001)

விபுல் அமிர்த்லால் ஷா (தற்பொழுது)

ஆரம்ப வாழ்க்கை

தொகு

செஃபாலீ ஷா சூலை 1972 இல் பிறந்தார், சுதாகர் ஷெட்டி (முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர்) மற்றும் ஷோபா ஷெட்டி (குஜராத்தி குடும்பத்திலிருந்து ஒரு ஹோமியோபதி மருத்துவர்) அவர்களுக்கு பிறந்த ஒரே குழந்தை.[3] மும்பை சாண்டா குரூஸில் ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் தனது இளமைப் பருவத்தை இவர் கழித்தார், அங்கு அவர் ஆர்யா வித்யா மந்திர், சாண்டாக்ரூஸ் பள்ளியில் படித்தார். அவர் துளு, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.

தொழில்

தொகு

செஃபாலீ ஷா ரங்கீலா (1995) திரைப்படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமாகி நடித்தார்.[4] இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். கபீ கபீ என்ற தொடர் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

செஃபாலீ ஷா தொலைக்காட்சி நடிகர் ஹர்ஷ் சாயாவை மணந்தார்.[6][7] விவாகரத்து செய்த பிறகு, இயக்குனர் விபுல் அம்ருதாலால் ஷாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[8][9]

குறிப்புகள்

தொகு
  1. "Now, I'll play my age in films: Shefali Shah". The Times of India. 24 October 2009. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Now-Ill-play-my-age-in-films-Shefali-Shah/articleshow/5153446.cms. பார்த்த நாள்: 28 July 2018. 
  2. "Shefali Shah wins best actor award". The Times of India. 30 October 2007. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shefali-Shah-wins-best-actor-award/articleshow/2499452.cms. பார்த்த நாள்: 28 July 2018. 
  3. Vimla Patil (24 January 1999). "The Tribune...Sunday Reading". The Tribune. https://www.tribuneindia.com/1999/99jan24/sunday/head9.htm. பார்த்த நாள்: 28 July 2018. 
  4. "The Last Lear is my best performance: Shefali Shah". 16 September 2008. 
  5. "Strong and never silent". Indian Express. 27 April 1998. 
  6. 'I get on with life quickly' - Hindustan Times பரணிடப்பட்டது 23 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  7. "Harsh Chhaya's wife Shefali to replace Seema Kapoor in Hasratein". இந்தியா டுடே. 10 May 2013. http://indiatoday.intoday.in/story/harsh-chhayas-wife-shefali-to-replace-seema-kapoor-in-hasratein/1/276532.html. பார்த்த நாள்: 28 July 2018. 
  8. Subhash K Jha (8 March 2006). "People say I look like Kasturba Gandhi: Shefali Shah". சிஃபி. http://www.sify.com/movies/people-say-i-look-like-kasturba-gandhi-shefali-shah-news-bollywood-kkfvqihegicsi.html. பார்த்த நாள்: 28 July 2018. 
  9. "Married to the 'boss'! Shefali Shah's waqt with Vipul!". Indiatimes.com Movies. 22 April 2005 இம் மூலத்தில் இருந்து 13 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100213173126/http://movies.indiatimes.com/News-Gossip/Interviews/Actresses/Married-to-the-boss-Shefali-Shahs-waqt-with-Vipul/articleshow/1085581.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செஃபாலீ ஷா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஃபாலீ_ஷா&oldid=3714067" இலிருந்து மீள்விக்கப்பட்டது