செங்கலூர் அரங்கநாதன்
செங்கலூர் அரங்கநாதன் (Chengalloor Ranganathan)(இறப்பு 1917) இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு ஆண் ஆசிய யானையாகும், இது ஆசியாவிலேயே மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை என்று நம்பப்படுகிறது. [2] [3]
செங்கலூர் அரங்கநாதன் Chengalloor Ranganathan | |
---|---|
இனம் | எலிபசு மேக்சிமசு (ஆசிய யானை) |
பால் | ஆண் |
இறப்பு | 1917 திருச்சூர் |
Resting place | திருச்சூர் விலங்கு காட்சியகம் |
நாடு | இந்தியா |
செயற்பட்ட ஆண்டுகள் | 1906-1914 |
அறியப்படுவதற்கான காரணம் | ஆறாட்டுப்புழா பூரம், பிற பூரம் |
Predecessor | பூமுள்ளி சேகரன்[1] |
உரிமையாளர் | செங்கலூர் மனை பரமேசுவரன் நம்பூதிரி |
உயரம் | 3.45 m (11 அடி 4 அங்) |
Named after | அரங்கநாதன் |
வாழ்க்கை
தொகுஅரங்கநாதன் முதலில் சென்னை மாகாணத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரங்கநாத சுவாமி கோயின் கோயில் யானையாக இருந்து. இளமையிலே கோயில் இந்த யானையினை பெற்றுக்கொண்டு, அன்றாட பணிகளுக்குப் பயன்படுத்தியது. ஆனால் இந்த யானை மிக உயரமாக வளர்ந்ததால், கோயிலின் உள் வாயில்கள் வழியாகச் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. இதனால், தமிழகத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் இந்த யானையினைப் பயன்படுத்த முடியாமல், யானையினை விற்க நிர்வாகம் முடிவு செய்தது. 1905ஆம் ஆண்டில், திருச்சூரில் உள்ள செங்கலூர் மனையைச் சேர்ந்த பரமேசுவரன் நம்பூதிரி என்பவர் திருவரங்கம் தேவஸ்வத்திடமிருந்து ரூ.1,500க்கு இந்த யானையினை வாங்கினார். இந்த யானை திருச்சிராப்பள்ளியிலிருந்து திருச்சூர் வரை பல மாதங்கள் நடந்து சென்றதாக நம்பப்படுகிறது.[2][4] 1906 முதல் 1914 வரை, இந்த யானையானது ஆறாட்டுப்புழா பூரத்தின் முக்கிய உற்சவரைச் சுமந்து சென்றது. மேலும் திருச்சூர் பூரத்தின் திருவம்பாடியின் ஒரு பகுதியாக இருந்து. 1914ஆம் ஆண்டு ஆறாட்டுப்புழா பூரத்தின் போது அகவூர் கோவிந்தன் என்ற யானையால் கடுமையாக இந்த யானைத் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரங்கநாதனை செங்கலூர் மானாவுக்கு மாற்றினர். இங்குக் காயங்களுக்கு நீண்டகால சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது, ஆனால் 1917-ல் இறந்தது.[1][2]
அருங்காட்சியக காட்சி
தொகுஅரங்கநாதனின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள் எலும்புக்கூட்டைக் கண்காட்சியாக வைப்பதற்காக வாங்க முயன்றனர். அரங்கநாதனின் உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். யானை இறந்தவுடன், யானையின் உடல் விரைவாகச் சிதைய உதவுவதற்காக இரசாயனங்கள் கொண்ட ஒரு பெரிய குழியில் புதைக்கப்பட்டது. எலும்புக்கூடு அதன் புனரமைப்பு நோக்கத்திற்காக ஒவ்வொரு எலும்பின் எண்ணுடன் தோண்டப்பட்டது. இந்த எலும்புக்கூடு சென்னை அருங்காட்சியகத்திலிருந்து திருச்சூர் அருங்காட்சியகத்தால் பெறப்பட்டு, மீண்டும் இணைக்கப்பட்டு, அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் நிறுவப்பட்டது. இது இங்கு முக்கிய ஈர்ப்பாகத் தொடர்கிறது.[5]
உடல் பண்புகள்
தொகுஅரங்கநாதரின் எலும்புக்கூடு 345 செ.மீ. (136 அங்குலம்) உயரமுடையது. இது தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரனை விட 30 செ.மீ. உயரமானது ஆகும். இந்தியாவில் வாழும் மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை இதுவாகும். அரங்கநாதன் கேரளாவில் யானை பிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது.
சிறப்பு
தொகுமலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் அரங்கநாதனைப் போற்றும் வகையில் ஒரு பாடலை எழுதினார். 2022-ல் ஒரு 12 அடி 5 அங்குல அரங்கநாதனின் சிலை திருச்சூரில் உள்ள சித்தாண்டா கணேசு கோட்டையில் உள்ள யானை மேலாண்மை, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது முடிவடைந்தால் இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை சிலை இதுவாகவே இருக்கும். அரங்கநாதன்: உயரத்திற்கான தேடல் — ஒரு கலை ஆவணப்படம் என்பது சூரஜ் நம்பியட் மற்றும் சோனி நாராயணன் ஆகியோரால் யானை பற்றிய எடுக்கப்பட்ட 2022ஆம் ஆண்டைய ஆவணப்படமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "1917-ൽ ചരിഞ്ഞു, കേരളത്തിലെ മിക്ക ഉത്സവങ്ങളുടെയും ആവേശം; ആനത്തറവാട്ടിൽ രംഗനാഥനും എത്തുന്നു" (in en). Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 24 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220824170736/https://www.mathrubhumi.com/special-pages/thrissur-pooram-2022/chengallur-ranganathan-1.7488392.
- ↑ 2.0 2.1 2.2 Saju, M. T (19 August 2022). "New Malayalam documentary on 'the tallest elephant to have lived in Asia'" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220825121119/https://www.thehindu.com/entertainment/movies/new-malayalam-documentary-on-thrissur-chengalloor-ranganathan-the-tallest-elephant-in-asia/article65774692.ece.Saju, M. T (19 August 2022). . The Hindu. Archived from the original on 25 August 2022. Retrieved 22 August 2022.
- ↑ "12.5 അടി, ഉയരം പരിക്കുകളേല്പ്പിച്ച രംഗനാഥന്, 105 വര്ഷം മുന്പ് തൃശൂരില് ചെരിഞ്ഞ ഏഷ്യയിലെ വലിപ്പമേറിയ ആന, അസ്ഥികള് ഇന്നും ഭദ്രം". ETV Bharat News. 18 August 2022. https://www.etvbharat.com/malayalam/kerala/state/thrissur/chengallur-ranganadhan-tallest-elephant-skeleton-in-museum/kerala20220818121227881881904.
- ↑ "Imposing skeleton structure of tallest elephant greets visitors at Thrissur museum". ETV Bharat News. 18 August 2022 இம் மூலத்தில் இருந்து 25 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220825121619/https://www.etvbharat.com/english/national/bharat/the-skeleton-of-asias-tallest-elephant-died-in-1917-on-display-at-thrissur-museum/na20220818214543580580863.
- ↑ "Multi-purpose Museum". Department of Museums and Zoos (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.