திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில்

கேரளாவில் அமைந்துள்ள இந்துக் கோயில்

திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோயில் (Thiruvambadi Sri Krishna Temple)[1] என்பதுஇந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூர் நகரில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள் குழந்தை வடிவில் கிருட்டிணன், பத்திரகாளி தேவியுமாவர். இங்கு இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. பிள்ளையார், சாஸ்தா, பிரம்மராட்சர்கள் ஆகியோருக்கு உப சன்னதிகள் உள்ளன. மேலும் கோயிலுக்குப் பின்னால் பிள்ளையாருக்கு ஒரு உபகோயில் உள்ளது. கேரளாவின் மிகப்பெரிய உள்ளூர் திருவிழாவான திருச்சூர் பூரத்தில் பங்கேற்கும் இரண்டு போட்டி குழுக்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். பகவத் கீதை பாராயணம் கோவிலை உயிர்ப்பிக்கிறது. தேவஸ்வம் மக்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்குகிறது.

திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:திருச்சூர் நகரம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளம்

வேட்டியும், புடவையும் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும். நவீன ஆடைகள் அனுமதிக்கப்படுவதில்லை.[2]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Thiruvambady Sri Krishna Temple Timings, History, Pooja, Dress Code". பார்க்கப்பட்ட நாள் 12.0./2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "THIRUVAMBADI SRI KRISHNA TEMPLE, KERALA". www.templepurohit.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.

வெளி இணைப்புகள் தொகு