செங்களியன்
செங்களியன் (Red-crested pochard) என்பது ஒரு பெரிய மூழ்கு வாத்து ஆகும். இதன் அறிவியல் பெயரானது கிரேக்க சொல்லான Netta "வாத்து", மற்றும் இலத்தீன் rufina, "பொன்-சிவப்பு" ( rufus, என்பதிலிருந்து "ruddy" வந்தது) என்பதிலிருந்து வந்தது.[2] இதன் இனப்பெருக்க வாழ்விடம் தெற்கு ஐரோப்பாவில் உள்ள தாழ்நில சதுப்பு நிலங்கள், ஏரிகள் மற்றும் கருங்கடலை ஒட்டிய புல்வெளி மற்றும் அரை பாலைவனப் பகுதிகளிலிருந்து மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா வரை நீண்டுள்ளது. இவை குளிர்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ஆப்பிரிக்காவின் சிலபகுதிகளுக்கு ஓரளவு வலசை போகின்றன.
செங்களியன் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Netta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NettaN. rufina
|
இருசொற் பெயரீடு | |
Netta rufina (Pallas, 1773) | |
செங்களியன் காணப்படும் பகுதிகள் இனப்பெருக்கம் வாழிடம் இனப்பெருக்கம் செய்யாமை |
வயது வந்த ஆண் வாத்துகள் எளிதாக அடையாளம் காணத்தக்கதாக உள்ளன. அதாவது ஆண் பறவைகளுக்கு வட்டமான ஆரஞ்சு தலையும், சிவப்பு அலகும், கருப்பு மார்பகமும் உள்ளது. உடலின் பக்கவாட்டுகள் வெள்ளையாகவும், முதுகுபுறம் பழுப்பு நிறமாகவும், வால் கருப்பு நிறமாகவும் இருக்கும். பெண் பறவையின் உடல் மேற்பகுதி முழுவதும் வெளிர் பழுப்பு நிறமுள்ளதாகவும், முதுகுப் பகுதியும், உச்சந்தலையும் அடர் பழுப்பு நிறத்திலும், முகம் வெண்மையாகவும் இருக்கும். இவை கூட்டுப் பறவைகளாகும். குளிர்காலத்தில் பெரிய கூட்டமாக சேருகின்றன. பெரும்பாலும் மற்ற மூழ்கு வாத்துகளுடன் அதாவது களியன் வாத்துகளுடன் கலந்து இருக்கின்றன. இவை முக்கியமாக நீரில் மூழ்குதல் மூலம் உணவு தேடுகின்றன. இவை நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன.
மூச்சுஇழுப்பு போன்ற ஒருவித ஒலியை ஆண் எழுப்பும். கரகரப்பான வ்ராஹ்-வ்ராஹ்-வ்ராஹ் என்ற ஒலியை பெண் எழுப்பும்.
செங்களியான்கள் ஏரிக்கரையில் தாவரங்களுக்கு இடையில் கூடுகளை உருவாக்கி 8-12 வெளிர் பச்சை நிற முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Netta rufina". IUCN Red List of Threatened Species 2016: e.T22680348A86012189. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680348A86012189.en. https://www.iucnredlist.org/species/22680348/86012189. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 269, 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.