செந்துறை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
செந்துறை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செந்துறை ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2]செந்துறை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செந்துறையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,421 பேர் ஆவர். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 32,610 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,344 பேர் ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
தொகுசெந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- வீராக்கன்
- வஞ்சினபுரம்
- உஞ்சினி
- துளார்
- தளவாய்
- சிறுகளத்தூர்
- சிறுகடம்பூர்
- செந்துறை
- சன்னாசிநல்லூர்
- பொன்பரப்பி
- பிலாகுறிச்சி
- பெரியாக்குறிச்சி
- பரணம்
- பாளையகுடி
- நமங்குணம்
- நல்லம்பாளையம்
- நக்கம்பாடி
- நாகல்குழி
- மருவத்தூர்
- மணப்பத்தூர்
- மணக்குடையான்
- குமிலியம்
- குழுமூர்
- கீழமாளிகை
- இரும்பிலிகுறிச்சி
- அயன்தத்தனூர்
- அசாவீரன்குடிக்காடு
- ஆனந்தவாடி
- ஆலத்தியூர்
- ஆதனக்குறிச்சி
வெளி இணைப்புகள்
தொகு- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்