செனான் நாற்குளோரைடு

செனான் நாற்குளோரைடு (Xenon tetrachloride) XeCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிலைப்புத்தன்மையற்ற ஒரு சேர்மமாகும்.[1] மற்ற மந்தவாயு ஆலைடு சேர்மங்களைப் போல தனிமங்களை இணைப்பதன் மூலமோ, அதிக செயலில் உள்ள ஆலசனேற்ற முகவரைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது டெட்ரா ஆலோசெனான் சேர்மங்களில் மற்ற ஆலைடுகளை மாற்றுவதன் மூலமோ இதை தயாரிக்கமுடியாது. அதற்கு பதிலாக, K129ICl4 என்ற சேர்மத்தில் தொடங்கி, கதிரியக்கச் சிதைவு நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். 129ICl4 சகப்பிணைப்பு கொத்தில் உள்ள அயோடின்-129 அணு கதிரியக்கத்தன்மை கொண்டதாகும். இது பீட்டா சிதைவுக்கு உட்பட்டு செனான்-129 ஆக மாறுகிறது.[2][3] இதன் விளைவாக உருவாகும் XeCl4 மூலக்கூறு செனான் டெட்ராபுளோரைடுக்கு ஒப்பான சதுரத்தள மூலக்கூறு வடிவவியலைக் கொண்டுள்ளது.[4]

செனான் நாற்குளோரைடு
இனங்காட்டிகள்
14989-42-5 Y
InChI
  • InChI=1S/Cl4Xe/c1-5(2,3)4
    Key: YPLOYFASLUPKHY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 149605668
  • Cl[Xe](Cl)(Cl)Cl
பண்புகள்
Cl4Xe
வாய்ப்பாட்டு எடை 273.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாற்றாக, தனிமங்களை சேர்த்து மின்சுமையேற்றுவதன் மூலமும் செனான் நாற்குளோரைடு உற்பத்தியைப் பெறலாம்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Holleman, A.F.; Wiberg, E.; Wiberg, N.; Eagleson, M.; Brewer, W. (2001). Inorganic Chemistry. Academic Press. p. 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519. LCCN 2001091215.
  2. Bell, C.F. (2013). Syntheses and Physical Studies of Inorganic Compounds. Elsevier Science. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483280608.
  3. Cockett, A.H.; Smith, K.C.; Bartlett, N. (2013). The Chemistry of the Monatomic Gases: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier Science. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483157368.
  4. Perlow, G. J.; Perlow, M. R. (15 August 1964). "Mössbauer Effect Evidence for the Existence and Structure of XeCl4". The Journal of Chemical Physics 41 (4): 1157–1158. doi:10.1063/1.1726022. Bibcode: 1964JChPh..41.1157P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_நாற்குளோரைடு&oldid=3781795" இலிருந்து மீள்விக்கப்பட்டது