சென்னுபதி வித்யா

சென்னுபதி வித்யா (Chennupati Vidya) ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னுபதி வித்யா
Chennupati Vidya.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980 - 1984 and 1989 - 1991
முன்னவர் காடே முரஹரி
பின்வந்தவர் வாடே சோபனாத்ரீசுவர் ராவ்
தொகுதி விஜயவாடா
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 5, 1934(1934-06-05)
விஜயநகரம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 18 ஆகத்து 2018(2018-08-18) (அகவை 84)
விசயவாடா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சென்னுபதி சேசகிரி ராவ்
பிள்ளைகள் 1 மகனும், 3 மகள்களும்
பெற்றோர் கோரா (தந்தை)
சரஸ்வதி கோரா (தாய்)
விருதுகள் ஜம்னாலால் பஜாஜ் விருது (2014)

வாழ்க்கை வரலாறுதொகு

சென்னுபதி வித்யா, இறைமறுப்பாளரும் காந்தியவாதியுமான கோபராசு ராமச்சந்திர ராவ் எனும் கோரா என்பவருக்கும் அவரது மனைவி சரஸ்வதி கோரா என்பவருக்கும் மகளாகப் பிறந்தவர். தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் பிறந்தார். மேலும், விசாகபட்டிணத்திலுள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1950 ஆம் ஆண்டு சென்னுபதி சேசகிரி(1928-2008) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.[1]

அரசியல் வாழ்க்கைதொகு

1969 முதல் ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான "வாசவ்ய மகிலா மண்டல"த்தின் தலைவராக இருந்தார். [2] 1980ஆம் ஆண்டில் விஜயவாடா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் ஏழாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

சென்னுபதி வித்யா ஆந்திர மாநில கோ-கோ விளையாட்டுச் சங்கத்தின் தலைவராக இருந்தார். மேலும், ரோட்டரி இயக்கங்களுடனும், பன்னாட்டு அரிமா சங்கங்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார். இவர் விசயவாடாவில் 18.08.2018 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[3]

விருதுகளும் அங்கீகாரமும்தொகு

  • சென்னுபதி வித்யா 2014 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலன் பிரிவின் கீழ் ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். [4]
  • தெலுங்கு சாதனை புத்தகத்தில் "ஆதர்ச மான்ய மகிலா (சிறந்த பெண்) என்ற பிரிவில் இடம்பெற்றார். [5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னுபதி_வித்யா&oldid=3187627" இருந்து மீள்விக்கப்பட்டது