சென்னையில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்

சென்னையில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் (Taipei Economic and Cultural Center in Chennai) இந்தியாவின் தெற்கு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் தைவானின் ஆர்வங்களைப் பிரதிபலிக்கிறது. இராசதந்திர உறவுகள் இல்லாத நிலையில் ஓர் உண்மையான தூதரகமாக இவ்வமைப்பு செயல்படுகிறது. 2012 ஆம் ஆண்டில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் சென்னையில் நிறுவப்பட்டது.[2] டீன் சுங்-குவாங் என்ற பிரதிநிதி அப்போது வழிநடத்தினார்.[1]

சென்னை தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்
駐清奈辦事處
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லை இந்தியா (தென் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்)
 இலங்கை
 மாலைத்தீவுகள்
தலைமையகம்சென்னை
அமைப்பு தலைமை
வலைத்தளம்Taipei Economic and Cultural Center in Chennai

இலங்கை மற்றும் மாலத்தீவுடனான உறவுகளுக்கும் இந்த மையம் பொறுப்பாகும்.[3]

புதுதில்லியிலும் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[4] இம்மையம் நேபாளம் மற்றும் பூட்டானுடனான உறவுகளுக்குப் பொறுப்பாகும். மேலும் தாய்லாந்தின் பாங்க்கில் உள்ள தாய்பே பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலகத்துடன் சேர்ந்து வங்காளதேசத்திற்கான கூட்டுப் பொறுப்பையும் இம்மையம் ஏற்றுள்ளது.[3]

தைவானில் உள்ள இதன் இணை அமைப்பு தைபேயில் உள்ள இந்தியா-தைபே சங்கம் ஆகும்.[5]

இதையும் பார்க்கவும்

தொகு

இந்தியாவில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்

மேற்கோள்கள்

தொகு