சென்னையில் ந.ந.ஈ.தி பண்பாடு

சென்னையில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT culture in Chennai) பண்பாடு பன்முகத்தன்மையுடன் காணப்படுகிறது. இவரகள் வரலாற்று ரீதியாக விளிம்பு நிலையில் இருந்தனர். இவர்களின் மேம்பாட்டிற்காக குறிப்பாக திருநங்கைகள் முன்னேற்றத்திகான செயல்பாடுகள் மற்றும் ஆண்விழை ஆண் பாலியல் உறவு கொள்பவர்களை எயிட்சில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

நிறுவனங்களின் பட்டியல் தொகு

சென்னையில் தற்போது 15 க்கும் மேற்பட்ட குழுக்கள் நங்கை, நம்பி, ஈரர், திருனர்களின் பிரச்சினைகளை களைவதற்காகப் பணிபுரிந்து வருகிறது.[1] அவற்றில் பெரும்பாலானவை அந்தச் சமூக மக்கள் ஒன்றிணைந்து நடத்துவதும் இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுவது ஆகும்.

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை, 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட , முறைசாரா சென்னை வானவில் கூட்டணியின் ஒரு பகுதியாகும்.[2] இந்த குழு 2014 இல் மாநிலம் முழுவதும் உள்ள குழுக்களின் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு வானவில் கூட்டணியை விரிவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

ஆராய்ச்சி தொகு

நங்கை, நம்பி, ஈரர், திருனர் பிரச்சினைகளில் சமூக அறிவியல் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சமூக குழுக்களுடன் கூட்டாக இருக்கும் இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. பாலியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையம் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவப்பெயர்கள் ஆகிய குறித்து அதில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT), சமூகக் குழுவான சகோதரன் மற்றும் ஆர்வர்டு பல்கலைக்கழக பொது சுகாதாரப் பள்ளியுடன் இணைந்து ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே மனநலம் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கிறது.

சென்னையின் ந.ந.ஈ.தி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் தொகு

1986: பிரித்தானிய கவுன்சிலில் மை பியூட்டிஃபுல் லாண்ட்ரட் எனும் ஒரே பாலின காதல் சென்னையில் முதல் முறையாக திரையரங்கில் ஒலிபரப்பானது.1993 இல் சமூக எய்ட்சு தன்னார்வலரான சேகர் பாலசுப்ரமணியம் ஓரினச்சேர்க்கையாளராகவும் HIV- பாத்க்கப்பட்ட நபராகவும் தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டார். 1998 இல் சகோதரன் எனும் முதல் பாலியல் சிறுபான்மையினர் நலனுக்கான குழு சென்னையில் முதமுதலில் உருவானது. 1999 இல் கே சென்னை எனும் மின்னஞ்சல் பட்டியல் உருவாக்கப்பட்டது.2006: Orinam.net எனும் இணையதளம் தொடங்கப்பட்டது . 2006 இல் திருநங்கை வாலிபரான பாண்டியம்மாள்/பாண்டியனின்சென்னை காவல்துறையினரின் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2007 இல் சங்கமா சென்னையில் உருவானது. 2007 இல் சக்தி ஆதார மையம் உருவாக்கப்பட்டது,. 2008 இல்ரோஸ் வெங்கடேசன் சென்னை தொலைக்காட்சியில் முதல் திருநங்கை நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனார்.

ந.ந.ஈ.தி பணியிட கருத்தரங்கம் தொகு

மே 2017 இல், வேலை செய்யும் இடங்களில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விவாதிக்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்களை ஆகியோர் ஒண்றினைந்த ஒரு நிகவ்ழானது சென்னையில் நடந்தது. இந்த ந.ந.ஈ.தி பணியிட கருத்தரங்கு, ந.ந.ஈ.தி பணியிடம்-இந்தியாவில் உரையாடலை விரிவுபடுத்துதல் எனும் தலைப்பில் ஆர்எல்எக்ஸ் , பிரைட் பவுண்டேஷன் , ஓரினம் ஆகியன இணைந்து இந்த கருத்தரங்கத்தினை நடத்தினர்.[3]

எல்செவியரின் மூத்த துணைத் தலைவர் மைக்கேல் கோல்மன், கோத்ரெஜ் இந்தியா கலாச்சார ஆய்வகங்களின் தலைவர் பரமேஷ் ஷஹானி, தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுனில் மேனன், வழக்கறிஞர் பூங்குழலி பாலசுப்பிரமணியன், ரிதேஷ் ரஜனி, பன்முகத்தன்மை நிபுணர் மற்றும் பத்திரிகையாளர் லாவண்யா நாராயண் உள்ளிட்ட பலர் அந்தக் குழுவில் இருந்தனர்.[4][5][6]

சான்றுகள் தொகு

  1. "Chennai Pride Organizations". www.orinam.net. பார்க்கப்பட்ட நாள் 7 July 2014.
  2. Menon, Sunil. "Gay pride month is here". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 7 July 2014.
  3. "LGBT community symposium seeks a level playing field at workplace".
  4. "Pride at Work". 19 June 2017.
  5. "'Coming out' and excluded".
  6. "Pride at Work". பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.