சென்னை நேரம்

சென்னை நேரம் (Madras Time) என்பது இந்தியாவின், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வானியலாளரான ஜான் கோல்டிங்ஹாம் என்பவரால் 1802 இல் நிறுவப்பட்ட ஒரு நேர வலயம் ஆகும். அவர் கிரீன்விச் இடைநிலை நேரத்திற்கு முன்னதாக 5 மணி நேரம், 21 நிமிடங்கள் மற்றும் 14 விநாடிகளாக சென்னை நேரத்தை நிர்ணயித்தார்.[1] மேலும் இது கொல்கத்தா நேரத்துக்கு 33 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகள் பின்னதாக இருப்பதாக விவரிக்கப்படுகிறது.[2] இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, இது உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத்தின் ஷங்கர்கரில் 82.5 டிகிரி எக்டேட்டர் என்ற இடத்திலிருந்து பெறப்பட்ட இந்திய சீர் நேரத்திற்கு முன்னோடியானது ஆகும்.[3]

1884 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் இரண்டு அதிகாரப்பூர்வ நேர மண்டலங்களாக மும்பை நேரம் மற்றும் கொல்கத்தா நேரம் போன்றவை அமைக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இரயில் நிறுவனங்கள் இரண்டு மண்டலங்களுக்கு இடையில் ஒரு இடைநிலை நேர மண்டலமாக சென்னை நேரத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் சென்னை நேரமானது "இந்தியாவின் இரயில்வே நேரம்" என்றும் அறியப்பட்டது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. William Nicholson, தொகுப்பாசிரியர் (1809). "Eclipses of the Satellites of Jupiter, observed by John Goldingham and under his Superintendence, at Madras, in the East Indies". A Journal of Natural Philosophy, Chemistry, and the Arts (London: Stratford, Crown Court and Temple Bar) 22: 153–156. https://books.google.com/?id=xJAOjlQ6TNMC&pg=PA153&dq=madras+time++goldingham+1802#v=onepage&q=madras%20time%20%20goldingham%201802&f=false. 
  2. "On the Introduction of a Standard Time for India". Proceedings of the Asiatic Society of Bengal (Calcutta: Asiatic Society of Bengal): 62–66. June 1899. https://books.google.com/?id=kIIbAQAAIAAJ&pg=PA63&dq=%22Calcutta+time%22+%22madras+time%22#v=onepage&q=%22Calcutta%20time%22%20%22madras%20time%22&f=false. 
  3. "Odds and Ends". Indian Railways Fan Club. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03. {{cite web}}: External link in |work= (help)External link in |work= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_நேரம்&oldid=2751326" இலிருந்து மீள்விக்கப்பட்டது