செம்பியக்குடி

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

செம்பியக்குடி (Sembiyakudi ) என்ற ஊரானது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[1][2] இந்த ஊர் மாவட்டத்தலைநகரான அரியலூருக்கு தெற்கில் 29 கி.மீ. தொலைவில் உள்ளது. மாநிலத் தலைநகராச சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் உள்ளது.[3] இராசராச சோழனின் பாட்டியும் அரிஞ்சய சோழன், கண்டராதித்த சோழன், சுந்தர சோழன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், உத்தம சோழன் ஆகிய இந்த ஆறு பேரரசர்களின் ஆட்சிக்கு ராஜ மாதவாக இருந்து வழிகாட்டியவர் செம்பியன் மாதேவி இந்த ஊரில்தான் பிறந்ததாக இந்த ஊர்மக்கள் கருதுகின்றனர். இதனால் செம்பியன் மாதேவிக்கு இந்த ஊரில் சிலை வைக்க வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு எடுத்தனர். இதையடுத்து செம்பியக்குடியிலும் சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் சிலை அமைப்புக் குழுவினர் வீடு வீடாகச் சென்று ஐம்பொன் திரட்டினர். இந்த முயற்சியில் நான்கரை பவுன் தங்கம், 150 கிலோ வெண்கலம், 10 கிலோ வெள்ளி உட்பட மொத்தம் ஆயிரம் கிலோவுக்கு ஐம்பொன் திரட்டப்பட்டது. வேறு பலரும் நன்கொடை அளித்தனர் இவற்றைக் கொண்டு சுவாமிமலையில் ஆறேமுக்கால் அடி உயரத்திலான செம்பியன் மாதேவியின் முழு உருவ ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய் செலவில் இந்தச் சிலை செய்து முடிக்கப்பட்டு, செம்பியன்குடியில் சிலை நிறுவப்பட்டு, சிலைக்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை செம்பியன் மாதேவி பிறந்த நாளான 2017 மே 17 அன்று ( சித்திரை மாதத்து கேட்டை நட்சத்திரம்) சிலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  2. "திருமானூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  3. "Sembiyakudi". அறிமுகம். http://www.onefivenine. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  4. "ஆறேமுக்கால் அடியில் ரூ.20 லட்சம் செலவில் செம்பியன் மாதேவிக்கு 1000 கிலோ ஐம்பொன் சிலை: செம்பியக்குடியில் மே 13-ல் திறக்கப்படுகிறது". செய்தி. தி இந்து. 25 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியக்குடி&oldid=3577298" இலிருந்து மீள்விக்கப்பட்டது