செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்
செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் (15 மார்ச் 1929 - 18 நவம்பர் 2013)[1] தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.
எஸ். ஆர். டி. வைத்தியநாதன் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | மார்ச்சு 15, 1929 மயிலாடுதுறை, தஞ்சாவூர் |
இறப்பு | நவம்பர் 18, 2013 |
இசைக்கருவி(கள்) | நாதசுவரம் |
ஆரம்ப கால வாழ்க்கை தொகு
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறையில் பிறந்தவராகிய வைத்தியநாதன், செம்பனார் கோயில் எனும் ஊரினைச் சேர்ந்த இசைக் குடும்பத்தின் வழிவந்தவர். இவரின் தாத்தா இராமசாமிப் பிள்ளையின் இசையினை His Master’s Voice எனும் நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. இவரின் தந்தை தக்சிணா மூர்த்தியின் இசையினை Colombia நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. நாதசுர இசையினை மாயவரம் ராமைய்யா பிள்ளையிடமும், வாய்ப்பாட்டினை விழுந்தூர் ஏ. கே. கணேச பிள்ளை, மதுரை மணி ஐயர் ஆகியோரிடமும் கற்றார்.
தொழில் வாழ்க்கை தொகு
தர்மபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் எனும் அமைப்புகளால் ஆதீன வித்துவானாக அங்கீகரிக்கப்பட்டவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராகவும், சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் ஓய்வுப்பெற்ற ரீடராகவும் பணிபுரிந்தவர்.
பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும் தொகு
- இசைப்பேரறிஞர் விருது, 2008. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- கலைமாமணி விருது - வழங்கியது: தமிழக அரசு
- சங்கீத நாடக அகாதமி விருது, 2007 [3]
மேற்கோள்கள் தொகு
- ↑ Nagaswaram Exponent Dies
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
வெளியிணைப்புகள் தொகு
- தலைமுறை: ரக்தியும் விரக்தியும்!
- Serene and majestic பரணிடப்பட்டது 2008-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Kalam urges performing artists to form peace teams பரணிடப்பட்டது 2008-02-07 at the வந்தவழி இயந்திரம்
- Giving new life to the nagaswaram - Sembanarkovil Vaidyanathan
- Efforts needed to conduct music festivals in other places too பரணிடப்பட்டது 2007-01-05 at the வந்தவழி இயந்திரம்
- Award for nagaswaram maestro