செம்மங்கையர்

பெண்களைக் குறித்த கட்டுரைகள் வளர்க்கும் திட்டம்

செம்மங்கையர் (ஆங்கிலம்:Women in Red ; அஃகுப்பெயர்: WiR) என்பது பெண் பாலினச் சாய்வை குறைக்கும் விக்கிப்பீடியத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி, ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத பெண்ணினக் கட்டுரைகளை உருவாக்குவது, இதில் ஈடுபடுவோரின் முதன்மை இலக்காகக் கொள்ளப்படுகிறது. இத்தகையை கருதுகோளானது, ஆய்வு அடிப்படையில், 2015ஆம் ஆண்டு, இங்கிலாந்து பங்களிப்பாளரான, இரோசர் பம்கின் (Roger Bamkin) என்ற பங்களிப்பாளாரால் முன்மொழியப் பட்டது. இம்முன்மொழிதலின் பெயர், திட்டம் எக்சு எக்சு ("Project XX") என்பதே ஆகும். இத்திட்டம் தொடங்கியதிலிருந்து, திசம்பர் 22, 2016, ஆண்டு வரை, 45,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை, இத்திட்ட பங்களிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.[1] தற்போது பிற மொழி விக்கிப்பீடியரும், இதனை முன்மாதிரிகளாகக் கொண்டு, பெண்ணினக் கட்டுரைகளை வளர்த்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

செம்மங்கையர் இலச்சினை

திட்ட வரலாறு

தொகு

அதன்பிறகு, இரோசி சிடீபன்சன் குட்நைட்டு (Rosie Stephenson-Goodknight) என்ற அமெரிக்கப் பெண் பங்களிப்பாளரால், இப்பெயர், செம்மங்கையர் என மாற்றப்பட்டு,[2] இதற்குரிய விக்கிப்பீடியத் திட்ட வரைவு உருவாக்கப் பட்டது. இத்திட்டத்தில் பங்கு கொண்டு மற்றவரைப் போல, இத்திட்ட நோக்கில் செயற்பட்ட பெண் அறிவியலாளர் எமிலி டெம்பில் (Emily Temple-Wood) தனது பங்களிப்புக்காக, ஒவ்வொரு முறையும், முகநூல் போன்ற இணைய நுட்பங்களலாலும், ஒரு பாலின அடிப்படையிலான தகாத சொற்களால், தாக்கப் பட்டார் [2] என்பது குறிப்பிடத்தக்க, விக்கிமீடிய திட்ட வரலாற்று நிகழ்வாகும். இருப்பினும், முதன்முதலாக இவ்வாறு தாக்கப்பட்ட போது, அவரது வயது 12 ஆகும்.[3] 2016 ஆம் ஆண்டு விக்கிமீடிய நிறுவனத்தால் அறிவிக்கப் பட்ட, சிறந்த விக்கிமீடியருள் இவரும் ஒருவர், சிம்மி வேல்சால், 24 சூன் 2016 ஆம் ஆண்டு நடந்த விக்கிமேனியாவில். இவருக்கு இவ்விருதினை அளித்தார்.[4] இரோசி சிடீபன்சன் குட்நைட்டு என்பவருடன் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விக்கிமீடியருக்கான விருது பகிரந்து அளிக்கப் பட்டது. விக்கிமேனிய வரலாற்றில், ஒரு விக்கி விருது, இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

திட்ட முறைமை

தொகு
 
செம்மங்கையர் கட்டுரைகளாக்கம், நியூனகம் கல்லூரி, கேம்பிரிட்சு, 2017
 
சட்டைவில்லை: அனைத்துலக பெண்கள் நாள் 2017, செம்மங்கையர் கட்டுரைகளாக்கம்
  • செம்மங்கையர் திட்டப்படி, உலகெங்கும் இணைய வழியே கட்டுரைகளாக்கம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.[5] நாள் முழுவதும், ஒன்றிற்கும் மேற்பட்ட பங்களிப்பாளர், தொகுத்தலோட்டத்தில் (edit-a-thons) நடத்தப்படும் அல்லது தரப்படும் பயிற்சிக்கு ஒப்ப, விக்கிப்பீடியப் பாலினச் சாய்வு (Gender bias on Wikipedia) இன்றி, தொகுத்தல்களைச் செய்யும் போது, குறிப்பிடத்தக்கமை உள்ள பெண்கள் குறித்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகின்றன.[6]
  • ஆய்வின் படி, விக்கிப்பீடியாவில் பெண் தொகுப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏறத்தாழ 10 சதவீதம் பங்களிப்பாளர்கள் மட்டுமே, பெண் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், இத்திட்டத்தின் மற்றொரு இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.[6][7][8][9]
  • பெண் இனம் சார்ந்த சுயசரிதைக் கட்டுரைகள், 17 சதவீதமே இருக்கின்றன. ஆனால், ஆண்களைக் குறித்த சுயசரிதைக் கட்டுரைகள் அதிகம் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில், மொத்தம் 55  இலகர(lakh)க் கட்டுரைகள் இருக்கின்றன. இணையத்தில் பார்க்கப்படும் 5 தளங்களில் ஒரு தளம் விக்கிப்பீடியத் திட்டங்களின் ஒரு பக்கமாகத் திகழ்கிறது. ஆங்கிலம் தவிர்த்து, விக்கிப்பீடியக் கட்டுரைகள் 265 மொழிகளில் வளர்ந்து வருகின்றன. அம்மொழிகளில் ஏறத்தாழ மொத்தம் 4  கோடிக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், 16   கோடி, விக்கிமீடியப் பக்கங்களை, இணையவழியே, மக்கள் காண்பதாக, புள்ளிவிவரம் கூறிகிறது.[10]
  • பெண் இனம் சார்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டுரைகள் குறித்த பட்டியல் உருவாக்கப்பட்டது. அப்பட்டியல் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரகளை, எளிதே எடுத்துக் காட்டியது. அதனால் பங்களிப்பாளர்கள், தொடக்க நிலை தேர்ந்தெடுப்புச் சிக்கலின்றி, திட்ட இலக்கு நோக்கிய கட்டுரைகளை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கி அளித்த, 130க்கும் மேற்பட்ட, கட்டுரைப் பட்டியல்களை, இங்கு காணலாம். இப்பட்டியலில் இருந்து, திட்டம் தொடங்கியதிலிருந்து, பெண்னினக் கட்டுரைகளை, இத்திட்ட பங்களிப்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும், இக்கட்டுரைகளைச் சார்ந்த 17 கட்டுரைகள் வளர்ந்துள்ளன[11] என்பதும், குறிப்பிட்ட தகுந்த விக்கிப்பீடிய வரலாற்று நிகழ்வாகும். இதற்காக இரோசி, எமிலி என்ற மங்கைகளுக்கு விக்கிமேனியா 2016இல், சிறந்த விக்கிப்பீடியர் விருது, விக்கிமீடிய நிறுவனர்களில் ஒருவரான சிம்மி வேல்சால் வழங்கப் பட்டது.[2]

ஊடகங்கள்

தொகு

மேலுள்ள கட்டுரையில், குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் ஊடகங்கள் இங்கு, உரிய உரைகளுடன் தரப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Stein, Lucia (9 December 2016). "Wikipedia edit-a-thon tackles internet gender gap" (in en-AU). ABC News இம் மூலத்தில் இருந்து 7 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170307010106/http://www.abc.net.au/news/2016-12-09/wikipedia-edit-a-thon-tackles-internet-gender-gap/8106784. பார்த்த நாள்: 04 சூலை 2018. 
  2. 2.0 2.1 2.2 Redden, Molly (19 March 2016). "Women in science on Wikipedia: will we ever fill the information gap?". The Guardian இம் மூலத்தில் இருந்து 8 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171108145205/https://www.theguardian.com/technology/2016/mar/19/women-in-science-on-wikipedia-will-we-ever-fill-the-information-gap. பார்த்த நாள்: 03 சூலை 2018. 
  3. "இணையவழி தனிநபர் தாக்குதல்". பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018.
  4. "Jimmy Wales names Emily Temple-Wood and Rosie Stephenson-Goodknight as Wikipedians of the Year". விக்கிமீடியா நிறுவனம். 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 04 சூன் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Chemistry, The Royal Society of (18 August 2017). "Improving gender balance on Wikipedia". www.rsc.org (in ஆங்கிலம்). Archived from the original on 12 October 2017. பார்க்கப்பட்ட நாள் 04 சூலை 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. 6.0 6.1 "Wikipedia editing marathons add women's voices to online resource". Houston Chronicle இம் மூலத்தில் இருந்து 9 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171109200641/http://www.houstonchronicle.com/life/article/Adding-women-s-voices-to-Wikipedia-12344424.php. 
  7. Andrew Lih (20 June 2015). "Can Wikipedia Survive?". www.nytimes.com. Washington. Archived from the original on 21 June 2015. பார்க்கப்பட்ட நாள் 04 சூலை 2018. ...the considerable and often-noted gender gap among Wikipedia editors; in 2011, less than 15 percent were women. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Statistics based on Wikimedia Foundation Wikipedia editor surveys 2011 (Nov. 2010-April 2011) and November 2011 பரணிடப்பட்டது 5 சூன் 2016 at the வந்தவழி இயந்திரம் (April – October 2011)
  9. Hill, Benjamin Mako; Shaw, Aaron; Sánchez, Angel (26 June 2013). "The Wikipedia Gender Gap Revisited: Characterizing Survey Response Bias with Propensity Score Estimation". PLoS ONE 8 (6): e65782. doi:10.1371/journal.pone.0065782. பப்மெட்:23840366. பப்மெட் சென்ட்ரல்:3694126. Bibcode: 2013PLoSO...865782H இம் மூலத்தில் இருந்து 14 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141214132622/http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0065782. 
  10. Gordon, Maggie (9 November 2017). "Wikipedia editing marathons add women's voices to online resource". Houston Chronicle இம் மூலத்தில் இருந்து 9 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171109200641/http://www.houstonchronicle.com/life/article/Adding-women-s-voices-to-Wikipedia-12344424.php. பார்த்த நாள்: 04 சூலை 2018. 
  11. Kessenides, Dimitra; Chafkin, Max (22 December 2016). "Is Wikipedia Woke? The ubiquitous reference site tries to expand its editor ranks beyond the Comic Con set". Bloomberg.com இம் மூலத்தில் இருந்து 23 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170923001045/https://www.bloomberg.com/news/features/2016-12-22/how-woke-is-wikipedia-s-editorial-pool. பார்த்த நாள்: 04 சூலை 2018. 

இவற்றையும் காணவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • BBC – நோக்கம்: விக்கியில் பாலினச் சாய்வினை, எனது ஒவ்வொரு கட்டுரையாலும், நான் (இரோசி) சமாளித்த முறை (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மங்கையர்&oldid=3587030" இலிருந்து மீள்விக்கப்பட்டது