செம்மீன் (திரைப்படம்)
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு இத்திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
செம்மீன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ராமு கார்யாட்டு |
தயாரிப்பு | பாபு இஸ்மயில் சேட்டு |
மூலக்கதை | செம்மீன் படைத்தவர் தகழி சிவசங்கரப் பிள்ளை |
திரைக்கதை | எஸ்.எல். புரம் சதானந்தன் |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மார்கஸ் பார்ட்லி[1] யு. ராஜகோபால் |
படத்தொகுப்பு | இருசிகேசு முகர்ச்சி கே. டி. ஜோர்ஜ் |
கலையகம் | கண்மணி பிலிம்ஸ் |
விநியோகம் | கண்மணி பிலிம்ஸ் |
வெளியீடு | 1965 ஆக்ஸ்டு 19 |
நாடு | இந்திய |
மொழி | மலையாளம் |
1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் தங்கத் தாமரை விருது கிடைத்தது.[2].
நடிப்பு தொகு
- சத்யன் – பளனி
- ஷீலா – கறுத்தம்ம
- மது – பரீக்குட்டி
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் – செம்பன் குஞ்ஞு
- அடூர் பவானி – சக்கி
- லலா – பஞ்சமி
- சி. ஆர். ராஜகுமாரி – பாப்பிகுஞ்ஞு
- அடூர் பங்கஜம்
- கோட்டயம் செல்லப்பன்
- பறவூர் பரதன்
- பிலோமின
- ஜெ. எ. ஆர். ஆனந்த்
- கோதமங்கலம் அலி
பாடல்கள் தொகு
பாடல் வரிகள்: வயலார் ராமவர்மா இசை: சலில் சௌதுரி
# | பாடல் | நீளம் | |
---|---|---|---|
1. | "பெண்ணாளே பெண்ணாளே" | 5:39 | |
2. | "புத்தன் வலக்காரே" | 3:19 | |
3. | "மானசமைனே வரூ" | 3:12 | |
4. | "கடலினக்கரெப் போணோரே" | 3:48 | |
5. | "தீம் மியூசிக்" | 2:20 |
கதை தொகு
ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.[3]
சான்றுகள் தொகு
- ↑ "'வெப் வேர்ல்ட்-டின் பலத்தை உலகம் உணர்கிறது!' – SICA விழாவில் கமல்". ஆனந்த விகடன். 22 சனவரி 2017 இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217071334/http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/78437-kamalhassan-speech-in-sica-funtion.html. பார்த்த நாள்: 24 செப்டம்பர் 2020.
- ↑ "சினிமா" (in மலையாளம்). மலையாளம் வாரிக. 2013 மெய் 31 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306052243/http://malayalamvaarika.com/2013/may/31/essay1.pdf. பார்த்த நாள்: 08 அக்டோபர் 2013.
- ↑ "திரைப்படம் ஆன நாவல்கள்: கடலன்னைக்கு ஒரு திரை அர்ப்பணம் - செம்மீன்". தி இந்து (தமிழ்). 8 மார்ச் 2016. http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/article8450813.ece. பார்த்த நாள்: 8 ஏப்ரல் 2016.
இணைப்புகள் தொகு
- செம்மீன் – மலையாளசங்கீதம்.இன்போ