செம்மொழி விருது
செம்மொழி விருது என்பது, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு இந்திய நடுவண் அரசினால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்றைக் குறிக்கும். இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கும் வழங்கப்படுகிறது.
முதல் விருதுகள்
தொகுமுதன் முதலாக 2005 - 2006, 2006 - 2007, 2007 - 2008 காலப்பகுதிகளுக்குரிய செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மூதறிஞருக்கான விருதுகள் மற்றும் இளம் அறிஞர் விருதுகள் சென்ற நவம்பர் 2009-இல் அறிவிக்கப்பட்டன.
மூதறிஞருக்கான விருதுகள்
தொகுஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் பணம் என்பவற்றை உள்ளடக்கியன.
தொல்காப்பியர் விருது
தொகுதொல்காப்பியர் விருது பெறுபவர்
- பேராசிரியர் அடிகளாசிரியர் (100 வயது)
- 2009-2010 - ஐராவதம் மகாதேவன்
- 2010-2011 - ராம.தமிழண்ணல் பெரியகருப்பன்
குறள்பீடம் விருது
தொகுகுறள்பீடம் விருது பெறுபவர்
- முனைவர் ஜார்ஜ் ஹார்ட், தமிழறிஞர், அமெரிக்கா.
- 2009-2010 - ஐரோஸ்லாவ் வசெக், செக் குடியரசு.
- 2010-2011 - ஜான் ரால்ஸ்டன் மார், இங்கிலாந்து.
இளம் அறிஞர் விருதுகள்
தொகுஇவற்றோடு இளம் அறிஞர் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் அறிஞர் விருதானது சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.[1]
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2005-2006 | முனைவர் இரா. அறவேந்தன் |
முனைவர் ய. மணிகண்டன் | |
முனைவர் சி. கலைமகள் | |
முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் | |
முனைவர் கே. பழனிவேலு | |
2006-2007 | முனைவர் சு. சந்திரா |
முனைவர் அரங்க பாரி | |
முனைவர் மு. இளங்கோவன் | |
முனைவர் மா. பவானி | |
முனைவர் இரா. கலைவாணி | |
2007-2008 | முனைவர் அ. செல்வராசு |
முனைவர் ப. வேல்முருகன் | |
முனைவர் ஆ. மணவழகன் | |
முனைவர் ச. சந்திரசேகரன் | |
முனைவர் சா. சைமன் ஜான் | |
2008-2009 | முனைவர் A லக்ஷ்மிதத்தை |
முனைவர் S. மாதவன் | |
முனைவர் M. ராமகிருஷ்ணன் | |
முனைவர் S. செந்தமிழ்ப்பாவை | |
2009-2010 | முனைவர் தி. சுரேஷ் |
முனைவர் சே. கல்பனா | |
முனைவர் இரா. சந்திரசேகரன் | |
முனைவர் வாணி அறிவாளன் | |
முனைவர் சோ.முத்தமிழ்செல்வன் | |
2010-2011 | முனைவர் து. சங்கையா |
முனைவர் அ. ஜெயக்குமார் | |
முனைவர் அ. மணி | |
முனைவர் சி. சிதம்பரம் | |
முனைவர் க. சுந்தரபாண்டியன் | |
2011-2012 | முனைவர் கா. அய்யப்பன் |
முனைவர். ஏ. எழில்வசந்தன் | |
முனைவர் க. ஜவகர் | |
2012-2013 | முனைவர் அ. சதிஷ் |
முனைவர் இரா. வெங்கடேசன் | |
முனைவர் ப. ஜெய்கணேஷ் | |
முனைவர் எம். ஆர். தேவகி | |
முனைவர் அலிபாவா | |
2013-2014 | முனைவர் உல. பாலசுப்பிரமணியன் |
முனைவர் கலை.செழியன் | |
முனைவர் சோ. ராஜலட்சுமி | |
முனைவர் த. மகாலெட்சுமி | |
முனைவர் சௌ. பா. சாலாவாணிஸ்ரீ |
விருது வழங்கல்
தொகு28.03.2010 அன்று சென்னையில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற "பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை" என்ற தலைப்பிலான கருத்தரங்க தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இவ்விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கும் விழாவும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்ள இயலாத குறள்பீடம் விருது பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர், முனைவர் ஜார்ஜ் ஹார்ட்க்கு பின் வரும் நாளொன்றில் இவ்விருது அளிக்கப்படும்.
மே 6, 2011 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் இந்த தமிழ் அறிசர்களுக்கு தில்லியில் தமது மாளிகையில் ஓர் விழாவொன்றில் வழங்கி கௌரவித்தார். [[2]