செயல்வழி நிலப்படம்

செயல்வழி நிலப்படங்கள் (Flow maps) என்பன நிலப்படம் மற்றும் செயல்வழிப் படம் ஆகியவற்றின் கூறுகளை தன்னிடத்து கொண்டுள்ள ஒரு வித வரைபடங்கள். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பொருட்களின் நகர்வை படம்பிடித்துக் காட்டுகின்றன. புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை, வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களின் எண்ணிக்கை, ஒரு பிணையத்தில் உள்ள தரவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை போன்றவற்றை இவை காட்டுகின்றன.[1]

சார்லஸ் ஜோசப் மினார்டின் புகழ்பெற்ற செயல்வழி நிலப்படம். நெப்போலியனின் உருசியப் படையெடுப்பைக் காட்டுகிறது. நெப்போலியனின் படையிலிருந்த வீரர்கள் எண்ணிக்கை எப்படி நாட்கள் செல்லச் செல்ல குறைகின்றது; குளிர்காலத்தில் வெப்பம் குறையக் குறைய படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் மாண்டு, எப்படி படை அழிகின்றது என்பதை மினார்ட் தெளிவாக விளக்குகின்றார்

விவரம்

தொகு

செயல்வழி நிலப்படங்களைக் கொண்டு எண்ணக்கூடிய அனைத்து பொருட்களின் நகர்வையும் காட்டமுடியும் - (எ.கா) மக்கள், பண்டங்கள், இயற்கை வளங்கள், தட்பவெட்பநிலை. அளவிடமுடியாத விசயங்களான, அறிவு, திறன், கடன், நல்லெண்ணம் போன்றவற்றின் இடப்பெயர்வினையும் இவற்றால் காட்ட முடியும். இவ்வகை நிலப்படங்களால் விளக்கக்கூடிய விசயங்கள் பின்வருமாறு:[2]

  • நகரும் / இடம் பெயரும் பொருள்c.
  • அப்பொருள் நகரும் திசை, எங்கிருந்து எங்கு செல்கிறது போன்ற தகவல்கள்
  • நகரும் பொருளின் எண்ணிக்கை / அளவு.
  • எது நகர்கிறது எப்படி நகர்கிறது என்பது குறித்து பொதுத்தகவல்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Doantam Phan (2005). Flow Map Layout Stanford University InfoVis 2005
  2. Robert L. Harris (1999). Information Graphics. p.157.

மேலும் படிக்க

தொகு
  • Borden D. Dent (1999). Cartography : Thematic map design. McGraw-Hill. New York. 1999.
  • Alan MacEachren. (1995). How maps work: Representation, Visualization, and Design. Guilford Press. New York.
  • Robert L. Harris (1999). Information Graphics. Oxford University Press US

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்வழி_நிலப்படம்&oldid=3246160" இலிருந்து மீள்விக்கப்பட்டது