செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்
செயிண்ட் பியேர் (Saint-Pierre) கனடாவின் நியூ பவுண்ட்லாந்து கடற்கரைக்கு அப்புறமாக அமைந்துள்ள பிரான்சிய கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றான செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனின் தலைநகரம் ஆகும். செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனில் உள்ள இரு பிரான்சிய கொம்யூன்களில் (நகராட்சி) பியேர் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.
செயிண்ட்-பியேர் | |
---|---|
நாடு | பிரான்சு |
வெளிநாட்டு Overseas collectivity | செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் |
அரசு | |
• நகரமுதல்வர் (2014-2020) | கரீன் கிளைரோ (பிஎசு) |
Area 1 | 25 km2 (10 sq mi) |
மக்கள்தொகை (சூலை 2011) | 5,888 |
• அடர்த்தி | 240/km2 (610/sq mi) |
நேர வலயம் | ஒசநே−03:00 |
• கோடை (பசேநே) | ஒசநே−02:00 |
INSEE/அஞ்சற்குறியீடு | 97502 /97500 |
ஏற்றம் | 0–207 m (0–679 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
புவியியல்
தொகுசெயிண்ட் பியேர் கொம்யூன் (நகராட்சி) செயிண்ட் பியேர் தீவுப் பகுதியையும் அடுத்துள்ள சிறு தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவற்றில் ல ஐல் ஆக்சு மாரின் என்ற சிறுதீவு குறிப்பிடத்தக்க அளவிலானதாகும். இந்த நகரத்தில் செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனின் 90% மக்கள் வாழ்ந்தாலும் இதன் வடமேற்கிலுள்ள இந்நாட்டின் மற்றொரு நகரமான மீகேலோன்-லாங்கிளேடை விட பரப்பளவில் சிறியதாகும்.
செயிண்ட் பியேர் தீவின் கிழக்குக் கடலோரமாக அத்திலாந்திக்குப் பெருங்கடலை நோக்கியுள்ள பராசாய்சு எனப்படும் துறைமுகத்தின் வடக்கில் முதன்மை நகரமும் ஆட்சி மன்ற அலுவலகங்களும் அமைந்துள்ளன. இயற்கைத் துறைமுகமான பராசாய்சைச் சுற்றிலும் சிறு தீவுகள் அரணாக உள்ளன.
மக்கட்தொகையியல்
தொகு2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சியின் மக்கள்தொகை 5,888 ஆகும்.[1] இவர்களில் பெரும்பாலோர் பாசுக்கு, பிரித்தனி, நார்மண்டி இனத்தவராவர்.
அரசு
தொகுநகராட்சி நகரமன்றத்தையும் நகரத்தந்தையையும் கொண்டியங்குகின்றது.
அடையாளங்கள்
தொகுதுறைமுகத்தையொட்டி அஞ்சல் அலுவலகமும் சுங்க அலுவலகமும் அமைந்துள்ளன; இவற்றின் பின்னே நகரத்தின் மையமான சார்லசு டிகாலே சதுக்கம் அமைந்துள்ளது.
செயிண்ட் பியேரில் உள்ள மற்ற கட்டிடங்கள்: சதுக்கத்திற்கு வடக்கே செயிண்ட் பியேர் பேராலயம் பெருந்தீவிபத்தை அடுத்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டுள்ளது; துறைமுகத்தின் வாயிலில் பாயிண்ட் ஆக்சு கேனோன்சு கலங்கரைவிளக்கம்; மேலும் வடக்கில், நகரத்தின் முன்னாள் மருத்துவமனைக்கு அருகே, பிரான்டன் பெலோட்டா விளையாட்டரங்கம் உள்ளது.
-
தளபதி சார்லசு டிகால் சதுக்கம்
-
செயிண்ட் பியேர் பேராலயம்
-
பாயிண்ட் ஆக்சு கேனோன்சு கலங்கரைவிளக்கம்
-
பிரான்டன் பெலோட்டா விளையாட்டரங்கம்
மேற்சான்றுகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Official website (பிரெஞ்சு)
- Encyclopédie de Saint-Pierre et Miquelon பரணிடப்பட்டது 2005-05-29 at the வந்தவழி இயந்திரம்
- Tourism and Travel Resources for St Pierre & Miquelon
- Frequently Asked Questions Tourism and Travel
- Map of Saint-Pierre
- Local Airline Air Saint-Pierre
- Ferry service for Saint-Pierre, Miquelon and Fortune Newfoundland பரணிடப்பட்டது 2013-09-30 at the வந்தவழி இயந்திரம்