செய்தி பிறந்த கதை (நூல்)
செய்தி பிறந்த கதை என்னும் நூல் பெங்களூரின் முதல் தமிழ் நாளிதழான தினச்சுடரின் ஆசிரியர் பா. சு. மணி எழுதிய நூலாகும்.
செய்தி பிறந்த கதை (நூல்) | |
---|---|
ஆசிரியர்(கள்): | பா. சு. மணி |
வகை: | இதழியல் |
துறை: | வரலாறு |
இடம்: | பெங்களூர் 52 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 152 |
பதிப்பகர்: | தினச்சுடர் பிரிண்டிங் டிவிசன் |
பதிப்பு: | முதற் பதிப்பு 1998 |
அமைப்பு
தொகுபா. சு. மணி தினத்தந்தி நாளிதழில் வேலைக்குச்சேர்ந்து, ஆதித்தனாரிடம் பத்திரிக்கை பாடம் படித்து சென்னைக்கு வெளியே துவக்கப்பட்ட முதல் தமிழ் மாலை நாளிதழான நெல்லை பதிப்பான மாலைமுரசு நாளிதழின் ஆசிரியராகி அதன் விற்பனையை அதிகரிக்க செய்த உத்திகள், பின்னர் பெங்களூரில் தினச்சுடர் மலை நேர இதழை தொடங்கிய காலத்தில் அதை வளர்த்தெடுக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றை ஒரு இதழியலாளரின் தன்வரலாறு போன்று அமைந்துள்ளது. இதை இதழியல் படிப்பவர்களுக்கு பாட நூலாக வைக்கலாம் என தினமணி இதழின் முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
உசாத்துணை
தொகுசெய்தி பிறந்த கதை நூல் முதற் பதிப்பு 1998, தினச்சுடர் பிரிண்டிங் டிவிசன், 11/2, குயின்ஸ் ரோடு, பெங்களூர்-52