செரீப் முகமது அகமது
செரீப் முகமது அகமது (Shariff Mohammed Ahmed) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக இருந்தார். இவர் 7 பிப்ரவரி 2019 அன்று பொறுப்பேற்றார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது பதவிக்காலம் 31 மே 2021 அன்று முடிவடைந்தது.
செரீப் முகமது அகமது | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவர் | |
பதவியில் 7 பிப்ரவரி 2019 – 31 மே 2021 | |
முன்னையவர் | என். எம். டி. பரூக், தெலுங்கு தேசம் கட்சி |
பின்னவர் | கோயி மோசுனு ராஜு, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தலைவர் | |
பதவியில் 31 மே 2015 – 31 மே 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | children தொழில் 1954/1955 (அகவை 69–70)[1] |
இறப்பு | children தொழில் |
இளைப்பாறுமிடம் | children தொழில் |
குடியுரிமை | இந்தியா |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | நரசாபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | சிறீ ஒயென் கல்லூரி (இளங்கலை வணிகவியல்) போபால் பல்கலைக்கழகம் (முதுகலை வணிகவியல்]] 1978, இளங்கலைச் சட்டம் 1978) |
இணையத்தளம் | mashariff |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தைச் சேர்ந்த முகமது காசிம் செரீப் என்பவருக்குப் பிறந்தார். நரசாபுரத்தில் உள்ள சிறீ ஒய். என். கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், 1978 இல் போபால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் பட்டத்தையும்,1979 இல் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகு1982 ஆம் ஆண்டு என். டி. ராமராவ் அவர்களால் தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தொடக்கத்திலிருந்தே செரீப் அங்கம் வகித்தார். கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.[1] இவர், சட்டப் பேரவை உறுப்பினராகவும், பின்னர் அரசாங்கக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார்.[2]
பிப்ரவரி 7, 2019 அன்று, ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக செரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] His tenure ended on 31 May 2021.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Sharif unanimously elected Andhra Council Chairman". Business Standard India. 7 February 2019. https://www.business-standard.com/article/news-ians/sharif-unanimously-elected-andhra-council-chairman-119020700984_1.html.
- ↑ 2.0 2.1 2.2 "Mohammed Sharif elected Chairman of AP Legislative Council" (in en). Deccan Chronicle. 8 February 2019. https://www.deccanchronicle.com/nation/politics/080219/mohammed-sharif-elected-chairman-of-ap-legislative-council.html.
- ↑ "MLC polls under MLA quota on November 29 in Andhra Pradesh". Deccan Chronicle. 1 November 2021. https://www.deccanchronicle.com/nation/politics/011121/mlc-polls-under-mla-quota-on-nov-29-in-ap.html.
- ↑ "AP Legislative Council chairman Md Ahmed Shariff to retire by month end". The Hans India. 21 May 2021. https://www.thehansindia.com/andhra-pradesh/ap-legislative-council-chairman-md-ahmed-shariff-to-retire-by-month-end-687120.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Andhra Pradesh State Portal பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம்