செருமேனியம் இருகுளோரைடு ஈராக்சேன்

வேதிச் சேர்மம்

செருமேனியம் இருகுளோரைடு ஈராக்சேன் (Germanium dichloride dioxane) என்பது GeCl2(C4H8O2) என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூற்று வாய்பாட்டில் இடம்பெற்றுள்ள C4H8O2 என்பது 1,4-ஈராக்சேனைக் குறிக்கும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் Ge(II) வகை சேர்மங்களுக்கான மூலமாகக் கருதப்படுகிறது. Ge(IV) வகை சேர்மங்களின் பரவலான தன்மையுடன் இது முரண்படுகிறது. இந்த ஈராக்சேன் அணைவு செருமேனியம் இருகுளோரைடின் நன்கு செயல்படும் வடிவத்தைக் குறிக்கும்.

செருமேனியம் இருகுளோரைடு ஈராக்சேன்
இனங்காட்டிகள்
28595-67-7
EC number 608-226-7
InChI
  • InChI=1S/C4H8O2.Cl2Ge/c1-2-6-4-3-5-1;1-3-2/h1-4H2;
    Key: NYMJLNHIEKAQSD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10857305
  • C1COCCO1.Cl[Ge]Cl
பண்புகள்
C4H8Cl2GeO2
வாய்ப்பாட்டு எடை 231.64 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.942 கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H314, H332, H351
<abbr class="abbr" title="Error in hazard statements">P203, P260, P261, P264, P271, P280, P301+330+331, <abbr class="abbr" title="Error in hazard statements">P302+361+354, P304+340, <abbr class="abbr" title="Error in hazard statements">P305+354+338, <abbr class="abbr" title="Error in hazard statements">P316, <abbr class="abbr" title="Error in hazard statements">P317, <abbr class="abbr" title="Error in hazard statements">P318, P321
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

செருமேனியம் டெட்ராகுளோரைடுடன் டிரைபியூட்டைல் வெள்ளீய ஐதரைடு சேர்ந்த ஈராக்சேன் கரைசலை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி செருமேனியம் இருகுளோரைடு ஈராக்சேன் தயாரிக்கலாம்.:[2]

GeCl4 + 2 Bu3SnH + C4H8O2 → GeCl2(O2C4H8) + 2 Bu3SnCl + H2

ஒடுக்க வினைக்கு ஐதரோசிலேன்களும் பயன்படுத்தப்படுகின்றன.[3]

இந்த அணைவுச் சேர்மம் பலபடிசார் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. செருமேனியம் ஒருபக்க Cl ஈந்தணைவி (Cl-Ge-Cl கோணம் = 94.4°) உடன் SF4 போன்ற வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. பாலம் அமைத்துள்ள ஈராக்சேன் வழங்கும் ஆக்சிசனால் அச்சுநிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. . Ge-O மற்றும் Ge-Cl பிணைப்பு தூரங்கள் முறையே 2.40 மற்றும் 2.277 A ஆகும்.[4]

வினைகள்

தொகு

செருமேனியம் இருகுளோரைடு ஈராக்சேன் அணைவுச் சேர்மம் கரிமசெருமேனியம் சேர்மங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் இச்சேர்மம் லூயிசு அமிலமாகக் குறைக்கும் பண்புகளுடன் பயன்படுத்தப்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Germanium(II) chloride dioxane complex (1:1)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Fjeldberg, Torgny; Haaland, Arne; Schilling, Birgitte E. R.; Lappert, Michael F.; Thorne, Andrew J. (1986). "Subvalent Group 4B Metal Alkyls and Amides. Part 8. Germanium and Tin Carbene Analogues MR2[M = Ge or Sn, R = CH(SiMe3)2]: Syntheses and Structures in the Gas Phase (Electron Diffraction); Molecular-Orbital Calculations for MH2 and GeMe2". Journal of the Chemical Society, Dalton Transactions (8): 1551. doi:10.1039/DT9860001551. 
  3. Roskamp, Carrie A.; Roskamp, Eric J. (2001). "Germanium Dichloride-Dioxane Complex". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rg002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
  4. Leites, L.A.; Zabula, A.V.; Bukalov, S.S.; Korlyukov, A.A.; Koroteev, P.S.; Maslennikova, O.S.; Egorov, M.P.; Nefedov, O.M. (2005). "Experimental and Theoretical Study of Vibrational Spectra and Structure of Dihalogermylene and Dihalostannylene Complexes with 1,4-Dioxane and Triphenylphosphine". Journal of Molecular Structure 750 (1–3): 116–122. doi:10.1016/j.molstruc.2005.04.015. Bibcode: 2005JMoSt.750..116L. 
  5. Simons, Richard S.; Pu, Lihung; Olmstead, Marilyn M.; Power, Philip P. (1997). "Synthesis and Characterization of the Monomeric Diaryls M{C6H3-2,6-Mes2}2 (M = Ge, Sn, or Pb; Mes = 2,4,6-Me3C6H2−) and Dimeric Aryl−Metal Chlorides [M(Cl){C6H3-2,6-Mes2}]2 (M = Ge or Sn)". Organometallics 16 (9): 1920–1925. doi:10.1021/OM960929L. 
  6. Roskamp, Carrie A.; Roskamp, Eric J. (2001). "Germanium Dichloride-Dioxane Complex". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rg002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.