செர்க்காம்

செர்க்காம் (ஆங்கிலம், மலாய் மொழி: Serkam) என்பது மலேசியா, மலாக்கா, சாசின் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு சிறுநகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 18 கி.மீ.; சாசின் நகரத்தில் இருந்து 24 கி.மீ.; மூவார் நகரத்தில் இருந்து 27 கி.மீ.;தொலைவில் இருக்கிறது.

செர்க்காம்
Serkam
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்சைடி பி அத்தான் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77300
தொலைபேசி குறியீடு06

செர்க்காம் நகருக்கு அருகில், மலாக்கா நீரிணைக் கடற்கரையோரம், உம்பாய் எனும் ஒரு சிறுநகரம் இருக்கிறது. ஈக்கான் பாக்கார் என அழைக்கப்படும் மீன் வாட்டல் உணவிற்குப் பெயர் பெற்ற இடம்.[1][2] தொலைதூர கோலாலம்பூர், சிங்கப்பூர் இடங்களில் இருந்து சுற்றுப் பயணிகள் வருகை தருகின்றனர். அருகாமையில் இருக்கும் சாசின் நகர மக்களும் இந்த மீன் உணவுக்காக வருகை தருகின்றனர்.[3]

முன்பு காலத்தில், இங்கு நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அந்தத் தோட்டங்களில் நிறைய தமிழர்களைக் காண முடிந்தது. அண்மையக் காலங்களில் இந்தப் பகுதி தொழில்துறை சிறுநகரமாக மாறி வருவதால், தமிழர்களின் மக்கள் தொகையும் குறைந்து வருகிறது.

இதே பெயரில் உள்ள மற்ற இடங்கள் தொகு

அருகிலுள்ள நகரங்கள் தொகு

  • உம்பாய்
  • தெடோங்

மேலும் படிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Medan Ikan Bakar Serkam located near to Masjid Jamek Serkam which is 30 km". Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-19.
  2. Ikan Bakar (roasted fish) restaurants in Umbai, Serkam and Alai are also popular.
  3. The Serkam Pantai Grilled Fish Food Court, located approximately 30 kilometres from Jassin town, is one of the main attractions for tourists who love seafood.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்க்காம்&oldid=3925858" இலிருந்து மீள்விக்கப்பட்டது