செர்சா சையது
செர்சா சையது (Shershah Syed பிறப்பு மார்ச் 26, 1953) ஒரு பாக்கித்தான் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், இவர் மகப்பேறியல் மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.[1][2] 2010 பாக்கித்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவசர மருத்துவ உதவிகளை வழங்குவதில் இவர் ஈடுபட்டார்.[3] இவர் பாக்கித்தானின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் சங்கத்தின் தலைவராக 2007-2010 ஆம் ஆண்டு வரை இருந்தார்,[4] இவர் சர்வதேச ஃபிஸ்துலா அறுவை சிகிச்சை சங்கத்தின் (ISOFS) தற்போதைய தலைவராகவும், பெண்கள் ஆரோக்கியத்திற்கான பாக்கித்தான் தேசிய மன்றத்தின் (PNFWH) தலைவராகவும் உள்ளார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவரது பெற்றோர் இந்தியாவின் பீகாரில் இருந்து குடிபெயர்ந்தனர். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதர சகோதிரிகள் மற்றும் இவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் இவர்களது பெரும்பாலான குழந்தைகள் மருத்துவர்களாகவும் உள்ளனர்.[சான்று தேவை]
இவரது தந்தை சையது அபுசாபர் ஆசாத், ஆசிரியராக இருந்தார், கராச்சியின் லியாரி மாவட்டத்தில் உள்ள காஜி முகமது பின் காசிம் பள்ளியின் நிறுவனர்/ தலைமை ஆசிரியர் ஆவார். இசுலாமிய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தனது முழு வாழ்நாள் முழுவதும் கல்வியை ஊக்குவிப்பதற்காக, குறிப்பாக பெண் கல்விக்காக பங்களித்தார். இவரது சமூகப் பணி கல்வி தொடர்பான பணிகள் தொடர்பாகவே இருந்தது .
இவரது தாயார் மருத்துவர் அதியா ஜாபர், ஆலிம்-ஃபாசில் படிப்பை முடித்த பிறகு எம்பிபிஎஸ் பெற்றார். இவள் ஒரு ஆர்வமுள்ள வாசகியாக இருந்தார் மற்றும் உருது மொழி மற்றும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார், இக்பால் இவருக்கு பிடித்த கவிஞர்களில் ஒருவர் ஆவார். இவர் பரவலாக சிறந்த மருத்துவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இவரது மனைவி மருத்துவர் . தயாபா ஃபதேமா ஷா குழந்தை மருத்துவர் மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசிக்கிறார், இந்தத் தம்பதியினருக்கு ஜரியா அதியா ஷா மகள் உள்ளார்.
தொழில்முறை வரலாறு
தொகுகராச்சியின் டவ் மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் க்குப் பிறகு, இவர் இங்கிலாந்திற்குச் சென்று அயர்லாந்தில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணராக பயிற்சி பெற்று பணியாற்றினார். அங்கு இவர் சிந்து அரசாங்கத்தில் வேலை செய்யத் தொடங்கினார் மற்றும் கராச்சியின் டோவ் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
இவர் பின்னர் கிஷன் தேவி சேதுமால் சோப்ராஜ் மகப்பேறு இல்லத்தில் எம்.எஸ். பயின்றார் அங்கு இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர் நிறுவனத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். நவாப்ஷா மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இவர் ஒராங்கி டவுனில் உள்ள கத்தார் மருத்துவமனையில் சேர்ந்தார்.
ஆய்வுதவித் தொகைகள் மற்றும் விருதுகள்
தொகு1994 ஆம் ஆண்டில் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில் பணிபுரியும் போது ஆர்சிஓஜி பயண விருது பெற்றார்.
RCOG மாதவிடாய் நிறுத்த விருது 1996 லண்டனில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவும் மற்றும் மருத்துவர் ஜான் ஸ்டட்டின் மாதவிடாய் நிறுத்தம் மருத்துவகத்தில் பணி செய்வதற்காக [6] வழங்கப்பட்டது.
கிளின்டன், இவரை குளோபல் முன்முயற்சியின் விருந்தினராக நவம்பர் 2009 இல் நியூயார்க்கில் ஜனாதிபதி கிளிண்டன் அழைத்தார் [7][8]
ஃபிகோ (மகப்பேறியல் பெண்மைப் பிணியியல் கூட்டமைப்பு) சாண்டியாகோ சிலியில் 2003 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தனித்துவ சமூக மகப்பேறியல் மருத்துவர் விருது.[9]
2014-ல் கே-எலக்ட்ரிக் வழங்கும் கராச்சியின் பெருமை விருது [10]
ஷேக் ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் விருது 2012 பிறப்புறுப்பு பாதை புண் புரை சிகிச்சை மற்றும் புண்புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தமைக்காக[11]
2011 ஆம் ஆண்டில் உமன் டெலிவர் , 100 ஊக்கமளிக்கும் பெண்கள் பட்டியலில் பருந்துரைக்கப்பட்டார்.[12]
சான்றுகள்
தொகு- ↑ Kristof, Nicholas (July 18, 2009). "His Maternal Instinct". www.nytimes.com. The New York Times. பார்க்கப்பட்ட நாள் April 6, 2011.
At 56, he is one of his country's best-known doctors and is president of the Society of Obstetricians and Gynecologists of Pakistan.
- ↑ "Fistula Awareness Day: Spouses of envoys unite to raise funds, awareness". tribune.com.pk. The Express Tribune. March 22, 2011. பார்க்கப்பட்ட நாள் March 24, 2011.
The idea was generated in the minds of the ladies after they heard about the work of Dr Shershah Syed, president of the Society of Obstetricians and Gynaecologists of Pakistan, who has made significant contributions to raising the level of maternal health care in Pakistan.
- ↑ Corbin, Jane (December 12, 2010). "The doctor on a mission in flood-hit Pakistan". www.bbc.co.uk. BBC. பார்க்கப்பட்ட நாள் April 6, 2011.
But people are willing to give to concerned individuals like Doctor Shershah, who through the Pakistan Medical Association is co-ordinating distribution of food and medicine in flood hit areas.
- ↑ "Brief History". www.sogp.org. The Society of Obstetricians & Gynecologists of Pakistan (SOGP). Archived from the original on மார்ச் 14, 2011. பார்க்கப்பட்ட நாள் April 6, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Us". www.pnfwh.org. Pakistan National Forum on Women's Health. Archived from the original on ஆகஸ்ட் 29, 2011. பார்க்கப்பட்ட நாள் April 6, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Education and Research Records of the Royal College of Obstetricians and Gynaecologists - Archives Hub". archiveshub.jisc.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "Clinton Global Initiative". Clinton Foundation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "Dr. Shershah Syed Clinton Global Inititive [sic] – PNFWH" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "Homepage | Figo". www.figo.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "K-Electric holds the Pride of Karachi Awards at Mohatta Palace | K-Electric" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "Dr. Shershad Syed - Sheikh Hamdan Bin Rashid Al Maktoum Award for Medical Sciences - HMA". www.hmaward.org.ae. பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
- ↑ "An Unwavering Advocate for Girls and Women". Women Deliver (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.