செர்மி உலகண்ணன்
செர்மி உலகண்ணன் (Shermi Ulahannan) இந்தியாவின் கபடி விளையாட்டின் பிரதிநிதியாக பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2010 ஆம் ஆண்டு குவாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இவர் உறுப்பினராக இருந்தார்.[1][2]
செர்மி உலகண்ணன் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மாலோம் கிராமத்தின் கொன்னக்காடு பகுதியைச் சேர்ந்தவராவார்.[2] வள்ளிக்கடவிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
2008 ஆம் ஆண்டு பாலியில் (இந்தோனேசியா) நடந்த ஆசிய கடற்கரை கபடி விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இவர் இருந்தார். கேரள மகளிர் கபடி அணியின் முன்னாள் தலைவராகவும் அறியப்படுகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கேரளா பெண் என்ற பெருமையைப் பெற்றார். 25 அக்டோபர் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று நிம்மி செபாசுடியனை மணந்து கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vinod, A. (29 November 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012.
- ↑ 2.0 2.1 "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). 8 January 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012.