செலாக்கோ

போர்னியோ தீவின் பழங்குடி மக்கள்

செலாக்கோ அல்லது செலாக்கோ மக்கள் (மலாய்: Kaum Selako; ஆங்கிலம்: Selako People அல்லது Selakau People) என்பவர்கள் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) சம்பாசு பிராந்தியத்தில் (Sambas Regency) உள்ள செலாகாவ் மாவட்டம் (Selakau District) மற்றும் செலாகாவ் திமோர் மாவட்டம் (Selakau Timur District); ஆகிய மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி மக்கள் ஆகும்.[3]

செலாக்கோ
Selako
 • Selakau
 • Silakau
 • Salako
மொத்த மக்கள்தொகை
208,100
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தோனேசியா
மேற்கு கலிமந்தான்
138,100[1]
 மலேசியா
 சரவாக்
70,000[2]
மொழி(கள்)
செலாக்கோ மொழி
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மேற்கு கலிமந்தான் செலாக்காவ் மாவட்டத்தில் உள்ள நைரி ஆற்றின் புகைப்படம்

இருப்பினும் தற்போது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள லுண்டு மாவட்டத்திலும் (Lundu District) செலாக்கோ மக்கள் அதிகமாய் உள்ளனர்.[4]

பொது தொகு

சில வேளைகளில் செலாக்கோ மக்கள்; பெரும் தயாக்கு மக்கள் சமூகத்தின் (Larger Dayak People) ஒரு பகுதியாக வகைப்படுத்தப் படுகிறார்கள். பொதுவாக கலிமந்தான் பகுதிகளில் வாழும் செலாக்கோ பழங்குடியினர் அவ்வாறு வகைப்படுத்தப் படுகிறார்கள்.[5]

அந்த வகையில் மேற்கு கலிமந்தான் பகுதிகளில் வாழும் செலாக்கோ பழங்குடியினர்; செலாக்கோ தயாக்குகள் (Selako Dayaks) என்று அழைக்கப் படுகிறார்கள்.[6]

காகரிங்கான் இந்து மதம் தொகு

செலாக்கோ மக்களின் தாய்மொழி செலாகோ மொழி (Selako Language). மற்ற தயாக்கு பழங்குடி குழுக்களைப் போலவே, செலாகோ மக்களும் காரிங்கான் இந்து மததைத் (Kaharingan Hindu Religion) தழுவினர்.

ஆனால் இப்போது பல செலாக்கோக்கள் கிறிசுதவர்களாக மதம் மாறி உள்ளனர். பெரும்பாலும் போர்னியோ எவாஞ்சலிக்கர்கள் (Borneo Evangelical Church), ஆங்கிலிகன்கள் (Anglicans) மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் (Roman Catholics). 19-ஆம் நூற்றாண்டில் சமயப் பரப்புரையாளர்களால் பெரிய அளவில் மதமாற்றம் (Mass Conversion) நடைபெற்றது.[7]

மேற்கோள்கள் தொகு

 1. "The Selako Dayak of Indonesia".
 2. Agnes Tugong (3 June 2011). "Masyarakat Selako sambut Gawai cara tersendiri". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 20 September 2014.
 3. Darrell T. Tryon (1995). Comparative Austronesian Dictionary: An Introduction to Austronesian Studies. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-1108-8401-1.
 4. Jean-Francois Bissonnette, Stephane Bernard & Rodolphe De Koninck (2011). Borneo Transformed: Agricultural Expansion on the Southeast Asian Frontier. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-544-6.
 5. "Selako". kbbi.kemdikbud.go.id. Language Development and Development Agency, Ministry of Education and Culture of the Republic of Indonesia. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.
 6. Clare L. Boulanger (2009). A Sleeping Tiger: Ethnicity, Class, and New Dayak Dreams in Urban Sarawak. University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-4376-4.
 7. Blossom Meghan Jessalyn (2011). Selako. Sess Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-613-852-3277.

மேலும் படிக்க தொகு

 • Schneider, William Martin (1979). Social Organization of the Selako Dayak of Borneo. University Microfilms.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலாக்கோ&oldid=3646258" இலிருந்து மீள்விக்கப்பட்டது