செலீனியம் ஆக்சிபுரோமைடு

செலீனியம் ஆக்சிபுரோமைடு (Selenium oxybromide) என்பது SeOBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

செலீனியம் ஆக்சிபுரோமைடு
Selenium oxybromide
இனங்காட்டிகள்
7789-51-7 N
ChemSpider 74220 Y
InChI
  • InChI=1S/Br2OSe/c1-4(2)3 Y
    Key: ZWTYAOCEBBZVQQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Br2OSe/c1-4(2)3
    Key: ZWTYAOCEBBZVQQ-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82242
SMILES
  • Br[Se](Br)=O
பண்புகள்
SeOBr2
வாய்ப்பாட்டு எடை 254.77 கி/மோல்
தோற்றம் சிவந்த மஞ்சள் திண்மம்
அடர்த்தி 3.38 கி/செ.மீ3,திண்மம்
உருகுநிலை 41.6 °C (106.9 °F; 314.8 K)
கொதிநிலை சிதைவடையும் 220 °C (428 °F; 493 K)
வினைபுரியும்
கரைதிறன் கார்பன் டைசல்பைடு, பென்சீன், கார்பன் நாற்குளோரைடு போன்றவற்றில் கரைகிறது.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு முறை தொகு

செலீனியம் ஈராக்சைடு மற்றும் செலீனியம் நான்குபுரோமைடு சேர்மங்கள் வினைபுரிவதால் செலீனியம் ஆக்சிபுரோமைடு உருவாகிறது. செலீனியம் மற்றும் செலீனியம் ஈராக்சைடு இரண்டும் புரோமினுடன் வினைபுரிந்து செலீனியம் ஒருபுரோமைடு மற்றும் செலீனியம் நான்குபுரோமைடு முதலியன உருவாகின்றன. செலீனியம் நான்கு புரோமைடில், செலீனியம் ஈராக்சைடை கரைப்பதன் மூலமாக செலீனியம் ஆக்சிபுரோமைடு உருவாக்கப்படுகிறது.[2]

2 Se + Br2 → Se2Br2
Se2Br2 + 3 Br2 → SeBr4
SeBr4 + SeO2 → 2 SeOBr2

பண்புகள் தொகு

செம்பழுப்பு நிறத்திண்மமாகக் காணப்படும் செலீனியம் ஆக்சிபுரோமைடு குறைவான உருகுநிலையைக் (41.6 ° செ) கொண்டுள்ளது. இச்சேர்மத்தின் வேதிப் பண்புகள் செலீனியம் ஆக்சிகுளோரைடின் வேதிப்பண்புகளை ஒத்துள்ளன. 220° செ வெப்ப நிலையில் செலீனியம் ஆக்சிபுரோமைடு கொதிப்பதாலும், கொதி நிலைக்கு அருகாமையிலான வெப்பநிலையில் சிதைவடைந்து விடுவதாலும் காய்ச்சி வடித்தல் முறையில் இச்சேர்மத்தைத் தூய்மைப்படுத்தும் முறை இயலாமல் போகிறது. உருகுநிலைக்குச் சற்று அதிகமான திரவ நிலையில் இச்சேர்மத்தின் மின் கடத்துகைத் திறன் 6×10−5 சிமென்சு/மீட்டர் ஆகும். தண்ணீரால் SeOBr2 நீராற்பகுப்பு|நீராற்பகுக்கப்பட்டு]] செலீனியசு அமிலம் (H2SeO3) மற்றும் ஐதரசன் புரோமைடு ( HBr) இரண்டும் உருவாகின்றன.

SeOBr2 அதிக வினைத்திறன் கொண்ட ஒரு சேர்மமாகும். திரவநிலை செலலீனியம் ஆக்சிபுரோமைடே பெரும்பாலான வினைகளில் பங்கேற்கிறது. இச்சேர்மத்தில் செலீனியம் உலோகம் கரைந்து Se2Br2 உருவாகிறது. இரும்பு, தாமிரம், தங்கம், பிளாட்டினம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் யாவும் செலினியம் ஆக்சிபுரோமைடால் தாக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ). Boca Raton, FL: CRC Press. பக். 4–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0594-2. https://archive.org/details/isbn_9780849305948 
  2. 2.0 2.1 Lenher, Victor (1 August 1922). "Selenium oxybromide". Journal of the American Chemical Society 44 (8): 1668–1673. doi:10.1021/ja01429a008.