செல்லினம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரையிலும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கி உள்ளனர்,