செஹோர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்


செஹோர் மாவட்டம் (Sehore District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் செஹோர் ஆகும். இது போபால் கோட்டத்தில் அமைந்துள்ளது.

செஹோர் மாவட்டம் மாவட்டம்
सीहोर जिला
செஹோர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்போபால் கோட்டம்
தலைமையகம்செஹோர்
பரப்பு6,578 km2 (2,540 sq mi)
மக்கட்தொகை1,311,332 (2011)
மக்கள்தொகை அடர்த்தி199/km2 (520/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை18.95%
படிப்பறிவு70.06%
பாலின விகிதம்918
மக்களவைத்தொகுதிகள்போபால்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,311,332 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 81.05% மக்களும்; நகரப்புறங்களில் 18.95% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.54% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 683,743 ஆண்களும் மற்றும் 627,589 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். 6,578 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 199 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.06% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.83% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 58.33% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 197,429 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,163,607 (88.73 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 137,980 (10.52 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மாவட்ட எல்லைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=செஹோர்_மாவட்டம்&oldid=3369792" இலிருந்து மீள்விக்கப்பட்டது