செ. கார்த்திக்

செ. கார்த்திக், (பிறப்பு:01 செப்டம்பர் 2001)[1] இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் இடம் பெற்ற இரண்டு தமிழர்களில் செ. கார்த்திக்கும் ஒருவர் ஆவார்.[2] [3]மற்றவர் கோவில்பட்டியைச் சேர்ந்த ச. மாரீஸ்வரன் ஆவார். செ. கார்த்திக் மே 2022 அன்று தேசிய வளைதடி பந்தாட்ட அணியில், முன்களப் பகுதியில் (Forward) விளையாடும் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4][5]

இவரும், ச. மாரீஸ்வரனும் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆக்கி மாணவர் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் ஆவார்.

இவர் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தா மாநகரத்தில் 23 மே 2022 முதல் 1 சூன் 2022 முடிய நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்யில்[6] ஆடவர் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில், இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியின் சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரலாறு

தொகு

கார்த்திக்கின் தந்தை அரியலூர் அரசுக் கல்லூரியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது தாய் வளர்மதி வீட்டு வேலைகளுக்கு சென்று வருகிறார். கார்த்திக் 7ம் வகுப்பு வரை அரியலூர் தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை ஒய். எம். சி. ஏ. விளையாட்டுப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். பின் திருச்சியில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர்ந்து படித்தார். தற்போது கோவில்பட்டி எஸ்.எஸ் துரை சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கார்த்திக்&oldid=3430219" இலிருந்து மீள்விக்கப்பட்டது