அரியலூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியம் (Ariyalur Block), இந்தியாவின், தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரியலூர் ஊராட்சி ஒன்றியம், முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அரியலூர் வட்டத்தில் உள்ள அரியலூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரியலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை, 1,10,558 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,210 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 960 பேர் ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஅரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]
- அருங்கால்
- அஸ்தினாபுரம்
- ஆண்டிப்பட்டாகாடு
- ஆலந்துறையார்கட்டளை
- இடையத்தாங்குடி
- இராயம்புரம்
- இலுப்பையூர்
- உசேனாபாத்
- எருத்துக்காரன்பட்டி
- ஓட்டக்கோவில்
- கடுகூர்
- கயர்லாபாத்
- கருப்பிலலாக்கட்டளை
- கல்லங்குறிச்சி
- காவனூர்
- கோவிந்தபுரம்
- சிறுவளூர்
- சீனிவாசபுரம்
- சுண்டக்குடி
- சுப்புராயபுரம்
- சென்னிவனம்
- தவுத்தாய்குளம்
- தாமரைக்குளம்
- தேளூர்
- நாகமங்கலம்
- புங்கங்குழி
- புதுப்பாளையம்
- பெரியதிருக்கோணம்
- பெரியநாகலூர்
- பொட்டவெளி
- மணக்கால்
- மணக்குடி
- மேலக்கருப்பூர்
- ரெட்டிப்பாளையம்
- வாலாஜாநகரம்
- விளாங்குடி
- வெங்கடகிருஷ்ணாபுரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்