செ. செந்தில்குமார்
செ. செந்தில்குமார்[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸை விட 63,301 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.[2][3]
செ. செந்தில்குமார் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தொகுதி | தருமபுரி |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | திமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஷோபனா |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
குடும்பம்தொகு
இவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மருத்துவப் படிப்பை படித்துள்ளார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.[4] இவரது தாத்தா டி. என். வடிவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாகவும், சேலம் - தருமபுரி - பெங்களூரு ரயில் போக்குவரத்துக்கும் காரணமாக இருந்தவர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "தேர்தல்".
- ↑ "தருமபுரி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன்: டிஎன்வி எஸ்.செந்தில்குமார்". தினமணி (மே 27, 2019)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ "வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரம்". பார்த்த நாள் 04-12-2020.