செ. திவான்
செ.திவான் என்பவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் திராவிட அரசியல் செயல்பாட்டாளராவார்.[1][2]
செ. திவான் | |
---|---|
பிறப்பு | நெல்லை, இந்தியா | 1 செப்டம்பர் 1954
புனைபெயர் | செ. திவான் |
தொழில் | வரலாற்றாசிரியர், திறனாய்வாளர் |
மொழி | தமிழ் |
இளமைக் காலம்
தொகுஇவர் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் நா.செய்யது மசூது மற்றும் செ.காசினம்மாள் பீவி தம்பதியினருக்கு மகனாக நெல்லை மாவட்டம் விசுவநாதபுரம் கிராமத்தில் பிறந்தார்.[3] விவசாயக் குடும்பத்தில் பிறந்து செங்கோட்டை எம்.எம் நடுநிலைப் பள்ளியிலும், எஸ்.எம்.எஸ்.எஸ் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். புதுமுக வகுப்பைப் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும், இளங்கலை படிப்பைப் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியிலும் படித்தார். கல்லூரி மாணவராக இருக்கும் போது திராவிட இயக்க அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக்கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெற்றார். 'இந்திய வரலாற்றில் தீவிரவாதம் - ஆஷ் கொலை' எனும் தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.[3]
எழுதிய நூல்கள்
தொகுஇதுவரை 110 நூல்களை திவான் எழுதியுள்ளார். வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், மாலிக்காபூர், மருதநாயகம் கான்சாகிப், திப்பு சுல்தான் - அவதூறுகளும் பதில்களும் ஆகியன இவர் எழுதிய முக்கிய நூல்கள். கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியைப் பற்றி மட்டுமே 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மூன்று வரலாற்று நூல்களை விகடன் பிரசுரமும், ஒரு நூலை குமுதமும் வெளியிட்டுள்ளன. இவரின் சுஹைனா பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறார்.
வரலாற்று நூல்கள் மட்டுமின்றி, ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகால மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நூல்களை எழுதியுள்ளார். லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப்பெரும் நூலகத்தை இவர் வீட்டிலேயே வைத்துள்ளார்.[1] மகாகவி பாரதியார் எழுதிய கடிதமும் பாடலும் அவரது கையெழுத்திலேயே இருக்கும் மூலப் பிரதி உள்ளிட்ட மிகமுக்கியமான வரலாற்று ஆவணங்கள் இவரிடம் உள்ளன.[சான்று தேவை]
- மாலிக்காபூர்
- மருதநாயகம் கான்சாகிப்
- இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்
- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
- இசை முரசு அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனீபா
- வாலேஸ்வரன்
- காலம் போற்றும் கவி கா.மு.ஷெரீப்
- வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள்
- சுப்பிரமணியசிவா சிறைவாசம்
- பரிசு பெறாத பாரதி பாடல்
- செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்
- வேலூர் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள்
- வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்
- பெரியாரின் குரு, வ..உ .சி.யின் உயில் ! செ.திவான்
- விடுதலை போரில் இந்தியர்கள் (தொகுதி-1) (சீதக்காதி அறக்கட்டளையின் ரூ 10,000 பெற்ற நூல்)
- ஆரியா மாயை அகல (சங்கொலி வார இதழ் நடத்திய போட்டியில் ரூ 5000 மரிசி பெற்ற நூல்)
- மிருக்குர்ஆன் தமிழில் விளக்கம் தந்த அறிஞர்கள்
- நமி பெருமானரின் நாற்பது பொன் மொழிகள்
- தக்கலை மீர் முகமது (ஒலி) ஞான பாடல்களும் சரிதையும்
- இந்திய சுதந்திர போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
- வ.வு.சியின் அழகும் ஆரோக்கியமும்
- குடை
- சிந்தனைக்கு
- வ.உ.சி.யின் துன்பத்தின் கற்பனை
- வ.உ.சி.யும் மெரியாரும்
- வ.வு.சி.யும் தொல்காப்பியரும்
- வ.உ.சி பாடல்கள்
- வ.உ.சி.யின் அரசியல் பெருஞ் சொல்
- தெற்க்கில் ஒலித்த தீன் குரல்
- விடுதலை போரில் விஸ்வகர்மாக்கள்
- பாரதியும் காங்கிரசும்
- ஸடெர்லைட்டை விரட்டுவோம்
- உண்மையின் சவுக்கடி
- கூடங்குளம் அணுஉலையை மூடு
- குடை புரட்ச்சி
- வாகை சூடிவரும் வைகோ
- கலைஞரை வென்ற வைகோ
- வைகோவின் பொன் மொழிகள்
- சேது சமுத்திர திட்ட நாயகன் வைகோ
- வ.வு.சி புகழ் பாடிய முன்னோடிகள்
- வ.வு.சி நூற்கோவை
- வ.வு.சி.யுன் நூற்க்கோவை
- வ.வு.சி.யும் பரலி சு நெல்லையப்பரும்
- ஆன்மீக சிந்தனை
- வேதங்கள் விலக்கிடும் விக்கிரக வழிபாடுசெய்கு தம்பி பாவலரின் ஷம்சுத்தாசீன் கோவை
- கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
- வ.ஒ.சி கண்ட பாரதி
- இரை நேசர் செல்வர் சிந்தா செஷய்கு மதார் ஷா (ஓலி)
- வ.வு.சி.யுன் வள்ளியம்மை சரித்திரம்
- இறைவனின் திருநாமங்கள்
- இறுதித் திரு நபியும் இயற்க்கையின் அற்புதங்களும்
- அண்ணாவின் மறு பக்கம்
- மாற்றார் மதித்மிடும் மா நபி (ஸல்)
- பெரிய முராணத்தில் வாழக்கை நெறி
- விடுதலையின் நிறம் பச்சை
- ஆரிய பாதையில் பசுவதை
- கட்டபொம்மனும் கலெக்டர் ஜாக்சனும்
- இலக்கிய புரட்ச்சியாளர் வ.வு.சி
- வ.வு.சி.யின் உயில்
- ஆலிப்புலவர்
- தியாக நெருப்பில் வைகோ
- வ.உ.சி.யும் திருக்குறளும்
- ஆணைய வேண்டிய அயோத்தி 'தீ'
- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
- வியத்தகு சாதனையாளர் வைகோ
- மாநபி (ஸல்) காட்டிய மனித உரிமைகள்
- வைகோ... வெற்றிப்பாதை.... வீரச்சங்கொலி
- செந்தமிழ் வளரத்த சீங்கப்பூர் அ.நா.மெய்தீன்
- விடுதலை போரில் வீரமிகு முஸ்லிம்கள் (தொகுதி -2)
- திராவிட இயக்கம்- வரலாற்று குறிப்புகள்
- வேலூர் புரட்ச்சியில் (1806) வீர மிகு முஸ்லிம்கள் (தொகுதி 3)
- இந்திய சுதந்திர பெரும் போரில் இஸ்லாமியர்கள்(தொகுதி 4) 1072 பக்கங்கள்
- சங்கொலி
- பம்பரம்
- சுயமரியாதை சூரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி
- இந்து முஸலிம் ஒற்றுமை
- புரட்சிக் கனலில் பொசுங்கும் துரோகம்
- மாலிக்காகாபூர்
- சிந்தனை சிற்பி வி.பி சிற்றரசு
- அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்
- கழகத்தின காவலர் கே.வி.கே சாமி
- இலக்கிய புரட்ச்சியாளர் வ.உ.சி.யின் சிவ ஞான போத உரை
- வ.உ.சி.யின் சுயசரிதை
- அஞ்சாநெஞ்சன் பட்டுகோட்டை அழகிரிசாமி
- கே.வி.கே சாமி கட்டுரைகள்
- நாடோடி மன்னன்
- விடுதலை வேள்வியில் விஸ்வநாததாஸ்
- கச்சதீவு யாருக்கு யாருக்கு சொந்தம்
- பாரதி செல்லம்மாள் உயில்
- தேவநேயப் பாவணரின் கிறிஸ்த்துவக் கீர்த்தனம்
- தேவநேயப் பாவணரின் துவாரகை மன்னன்
- இந்திய சுந்திர போரில் விஸ்வகர்மாக்கள்
- மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மகிமை
- வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராசர்
- பரிசு பெறாம பாரதி பாடல்
- உமறுப்புலவர் விருதும் உள்ள்த்து உணர்வும்
- அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமரசார்,தமிழர் தலைவர் வைகோ
- வல்லிகண்ணன் கடிதங்கள்
- இந்திய சுதந்திர போரில் வக்கம் அப்துல் காதர்
- சுதந்திர சங்கநாதம் சுப்ரமணிய சிவா சிறை வாசம்
- கம்பனில் அனுமனும் சிவனும்
- வரலாற்று பாதையில் பசுவதை
- மக்கள் திலகமும் மக்கள் தலைவரும்
- வரலாற்றின் வெளிச்சத்தில் போர்ச்சுகீசியர்கள் குஞ்ஞாலிகள்
- வ.வு.சி.யும் வாலேஸ்வரன்
- வ.வு.சி.யும் சைவ சமயமும்
- வ.வு.சி.யும் ஆஷ் கொலையும்
- இராமலிங்க வள்ளளாரும் செய்கு தம்பி பாவலரும்
- தி.க.சி.என்றொரு மானுடன்
- இசை முரசு நாகூர் இ.எம் ஹனீபா
- வரலாற்று றெழுத்தியல்
- முற்றுபெறாத சுயசரிதை
- தாயாய் தந்தையை தலைவராய்
- இந்திய சுதந்திர போரில் இரு சகோதரர்கள்
- கி.ரா கடிதங்கள்
விருதுகள்
தொகுசீதக்காதி அறக்கட்டளையின் சதக்கத்துல்லா அப்பா விருது, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உமறுப்புலவர் விருது, தமிழ்மாமணி விருது, பெரியார் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்களால் 'வரலாற்றியல் அறிஞர்' என்றும், தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் 'வரலாற்றுப் பேரறிஞர்' என்றும் புகழப்பட்டவர் செ.திவான்.[சான்று தேவை] விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான 'காயிதே மில்லத் பிறை' விருதைப் பெற்றார்.[4]
நூல்கள் நாட்டுடமை ஆக்கல்
தொகுசெ. திவானின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் வழங்குவதாக தெரிவித்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/literature/124279-.html. பார்த்த நாள்: 30 August 2019.
- ↑ "அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்". மதிமுக இணையத்தளம். Archived from the original on 30 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 3.2 "தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 16.1.2019 அன்று நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் பெரியார் விருது பெற்றவர்கள் பற்றிய குறிப்புகள்". விடுதலை. Archived from the original on 30 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2019 ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு". தினகரன். தினகரன் இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190712193741/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509333. பார்த்த நாள்: 30 August 2019.
- ↑ "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை". Dinamalar. 2022-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.