சேதுராமன் பஞ்சநாதன்
சேதுராமன் பஞ்சநாதன் (Sethuraman Panchanathan, பிறப்பு: சூன் 24, 1961) அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழக அறிவியலாளர். இவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்[2][3][4]. சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த விவேகானந்தா கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் இளநிலை பட்டமும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உயர்நிலை பட்டமும் பெற்றுள்ளார். ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் (கனடா) முனைவர் பட்டம் பெற்றவர்[5]. 1998 ஆம் ஆண்டு முதல் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2020 சூன் 19 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக இவரை அரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் நியமித்தார்.[6]
சேதுராமன் பஞ்சநாதன் Sethuraman Panchanathan | |
---|---|
தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-வது இயக்குநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
குடியரசுத் தலைவர் | டோனால்ட் டிரம்ப் |
முன்னையவர் | பிரான்சு ஆன்னி கோர்தவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 24, 1961 |
துணைவர் | சௌம்யா பஞ்சநாதன்[1] |
முன்னாள் கல்லூரி | ஒட்டாவா பல்கலைக்கழகம் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இந்திய அறிவியல் கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | research |
அறிவியல் பணி | |
துறை | மின், கணினிப் பொறியியல் |
பணியிடங்கள் | ஒட்டாவா பல்கலைக்கழகம் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | Algorithms and architectures for image coding using vector quantization (1989) |
ஆய்வு நெறியாளர் | மொரிசு கோல்பர்க் |
அறியப்படுவது | தகவலியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Soumya Panchanathan (Maricopa Integrated Health System) | Biomedical Informatics". Bmi.asu.edu. Archived from the original on ஜனவரி 7, 2013. பார்க்கப்பட்ட நாள் January 24, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Skip Derra (June 13, 2014). "President Obama appoints ASU's Panchanathan to National Science Board". https://asunews.asu.edu/20140613-panch-national-science-board. பார்த்த நாள்: 15 சூன் 2014.
- ↑ "Obama names IITian Sethuraman Panchanathan to Science Foundation board". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
- ↑ Vijayalakshmi (June 15, 2014). "அமெரிக்க தேசியக் கழக உறுப்பினராக தமிழக விஞ்ஞானி – ஒபாமா நியமனம்.". OneIndia Tamil. http://tamil.oneindia.in/news/international/obama-names-iit-alumnus-dr-sethuraman-panchanathan-science-f-203509.html. பார்த்த நாள்: 15 சூன் 2014.
- ↑ "Program Chair | Internet and Multimedia Systems and Applications | August 17 – 19, 2009 | Honolulu, Hawaii, USA". IASTED. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
- ↑ NSF (June 18, 2020). "Today, the Senate unanimously confirmed Sethuraman Panchanathan as the new @NSF Director" (Tweet).