சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி

இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர்

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி (Kshetrimayum Ongbi Thouranisabi Devi) என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய பாரம்பரிய நடனமான மணிப்புரி நடன வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[1][2] இவரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 2003 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[3][4]

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி
பிறப்பு3 நவம்பர் 1946 (அகவை 77)
பணிவரலாற்றாளர், கலை வரலாற்றாளர்

வாழ்க்கை வரலாறு தொகு

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமான சிங்ஜமீய் சபம் லெய்காய் என்ற இடத்தில் 1946 நவம்பர் 3 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் போலோ வீரரான லீஷாங்க்தேம் தம்பா சிங் மற்றும் லீஷாங்க்தேம் ஓங்பி இபெட்டோபிமாச்சா தேவி ஆகியோராவர். இந்த இணையருக்கு இவர் மூன்றாவது மகள் ஆவார்.[5][6] இவர் எந்தவொரு முறையான பயிற்சியையும் பெறுவதற்கு முன்பு, தனது 6 வது வயதிலேயே மேடை நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். பின்னர், இவர் 10 வயதிலிருந்து கோவிந்தாஜி நார்தனாலயத்தில் ( அரசு மணிப்பூர் நடனக் கல்லூரி ) ராஸ் லீலாவில் பயிற்சி பெற்று பட்டம் பெற்றார். மேலும் இவர் விசாரத் மற்றும் ஆச்சார்யா ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இவர் தன் நடனத் தொழிலைத் துவக்கும் முன்னர் விசாரத் மற்றும் ஆச்சார்யா மற்றும் மைஷ்னம் அமுபி சிங், அமுடோன் சர்மா, எச். டோம்பா, ஏ. டோம்பா சிங், லூரெம்பம் டோம்பி தேவி மற்றும் ஆர். கே. டோமல்சனா போன்ற குருக்களிடம் பயிற்சி பெற்றார். இதன் பிறகு இந்தியா மற்றும் கனடா, மேற்கு ஜெர்மனி, லண்டன், துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பல கலை விழாக்களில் ஆடியுள்ளார்.

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாடமியுடன் இணைந்து அதன் பாலே தயாரிப்புகளில் ஒன்றான ராதா சதியை இயக்கியுள்ளார்.[5] 2006 இல் ஓய்வு பெறும் வரை குரு ரஸ்தாரி, குருஹான் மற்றும் பிரதான் குரு என பல நிலைகளில் பல்லாண்டுகளாக இவர் அகாதமியில் கற்பித்தார்.[6] மணிப்பூரி நடனத்தை அடிப்படையாகக் கொண்ட திவா ராஸ் (2 தொகுதிகள்-1993) மற்றும் ராஸ் மகா அம்சுங் நுங்கி மசாக் (2006) ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியதற்காக பாராட்டப்படுகிறார். இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டு மணிப்பூரி நடனம் மற்றும் எச்எம்விக்காக ஆறு ஆல்பங்கள் பதிவு செய்துள்ளார்.

சேத்ரியம் ஒங்காபி தோரானிசா தேவி மகாராஜா ஒகேந்திரஜித் சிங்கிடமிருந்து அரச பொன்னாடையையும், மணிப்பூர் அரசிடமிருந்து தங்கப் பதக்கமும் பெற்றவர்.[5][6] மணிப்பூர் மாநில கலா அகாதமி 1977 ஆம் ஆண்டில் தனது வருடாந்திர விருதை வழங்கியது, 1980 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி ஒரு விருதையும் அளித்தது. மணிப்பூர் சாகித்ய பரிஷத் 1981 இல் நிருத்ய ரத்னா என்ற பட்டத்தை வழங்கியது. இந்திய அரசின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை 1987 ஆம் ஆண்டில் இவருக்கு மூத்த பெல்லோஷிப்பை வழங்கியது, மேலும் இவர் 1991 இல் மணிப்பூர் அரசிடமிருந்து மரியாதை சான்றிதழைப் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதை அளித்து கௌரவித்தது.[1][2] 2011 ஆம் ஆண்டில் பத்ம பூஷனுக்காக இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[7]

சேத்ரியம் ஒங்காபி தோரானிசாபி தேவி சிங்கமாதக் தோச்சோம் லெய்காயை மணந்தார், இந்த இணையர் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வசித்து வருகிறனர்.[5][6]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Dancers and Musicians of India". India online. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  2. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
  3. "Investiture ceremony". E Pao. 2015. Archived from the original on 20 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 5.0 5.1 5.2 5.3 "India online". India online. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  5. 6.0 6.1 6.2 6.3 "E Pao profile". E Pao. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
  6. "Padma Bhushan nomination" (PDF). Times of India. 2010. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.

வெளி இணைப்புகள் தொகு