சேத் கிராண்டு
ஆத்திரேலிய நரம்பணுவியலாலர் மற்றும் பேராசிரியர்
சேத் கிராண்டு (Seth Grant) என்பவர் ஆத்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு நரம்பியல் விஞ்ஞானியாவார். இவர் இசுக்கொட்லாந்து நாட்டிலுள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று நரம்பியல் பேராசிரியராக பணிபுரிந்தார். முன்னதாக இவர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சில் உள்ள வெல்கம் அறக்கட்டளையின் நிதியுதவியால் இயங்கிய பிரித்தானிய சாங்கர் நிறுவனத்தில் மரபணு ஆய்வின் முதன்மை புலனாய்வாளராக பணியாற்றினார்[3]. மூளை நோய்களின் உயிரியல் அடிப்படை தொடர்பான ஆய்வுகளுக்கு இவர் பெயர் பெற்றவராவார்[4][5]. 2015 ஆம் ஆண்டு மருத்துவ அறிவியல் அகாடமியின் கௌரவ உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[4]. எடின்பரோ ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3].
சேத் கிராண்டு Seth Grant | |
---|---|
பிறப்பு | சிட்னி, ஆத்திரேலியா |
தேசியம் | ஆத்திரேலியா[1] |
துறை | நரம்பணுவியல் |
பணியிடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் |
கல்வி | சிட்னி பல்கலைக்கழகம் |
கற்கை ஆலோசகர்கள் | எரிக் காண்டல்[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ O'Neill, Graeme (September–October 2012). "Neuroscience: Wired". Australian Life Scientist. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "Five minutes with Professor Seth Grant". Hello Brain. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ 3.0 3.1 "Professor Seth Grant". The University of Edinburgh (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ 4.0 4.1 "Professor Seth Grant". The Academy of Medical Sciences. Archived from the original on 2016-08-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ Kelland, Kate (2010-07-05). "Brain diseases linked to nerve cell junction defects" (in en). Reuters. https://www.reuters.com/article/us-mental-illness-synapses-idUSTRE6642MR20100705.