சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி

 

சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1954; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1954)
நிறுவுனர்சேத் சூரஜ்முல் ஜலான் அறக்கட்டளை
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் பிரக்யான் மொஹந்தி
அமைவிடம்
8/9, பங்கிம் சாட்டர்ஜி தெரு, கல்லூரி தெரு
, , ,
700073
,
22°34′32″N 88°21′53″E / 22.5756735°N 88.3645975°E / 22.5756735; 88.3645975
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி is located in கொல்கத்தா
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி
Location in கொல்கத்தா
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி is located in இந்தியா
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி
சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி (இந்தியா)

சேத் சூரஜ்முல் ஜலான் மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் வணிகப்பிரிவுகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1].

வரலாறு

தொகு

தொண்டு மற்றும் மத அறக்கட்டளையான சூரஜ்முல் ஜலான் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரியானது வடக்கு கொல்கத்தாவில் உள்ள குறிப்பிடத்தக்க பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது. வங்காளத்தின் சிறந்த தொழிலதிபரான சேத் மோகன்லால் ஜலான் மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய இந்த அறக்கட்டளையானது மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், நூலகங்கள் மற்றும் படிப்பகங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இவரது தந்தையின் நினைவாக இக்கல்லூரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

துறைகள்

தொகு

கலை மற்றும் வணிகப்பிரிவு

தொகு
  • வங்காளம்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • ஹிந்தி
  • வரலாறு
  • புவியியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • வணிகம்

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2]. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) அங்கீகாரம் பெற்று பி + தரத்தையும் அடைந்துள்ளது.

மேலும் காண்க

தொகு
  • கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
  • இந்தியாவில் கல்வி
  • மேற்கு வங்காளத்தில் கல்வி

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
  2. Colleges in WestBengal, University Grants Commission