சேனா ஜிலேபி
சேனா ஜலேபி அலல்து சேனா ஜிலேபி (Chhena jalebi) என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள கடலோர மாநிலமான ஒடிசாவினைச் சார்ந்த ஒரு இனிப்பு உணவாகும். ஒடிசா சேனாவால் செய்யப்பட்ட இனிப்புகளுக்குப் பெயர் பெற்ற மாநிலமாகும். இதன் புகழ் கடலோர ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் பிற கிழக்குப் பகுதிகளுக்கு அப்பாலும் பரவியுள்ளது.
மாற்றுப் பெயர்கள் | சேனா ஜலேபி |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின் |
தொடங்கிய இடம் | ஒடிசா |
பகுதி | ஒடிசா, மேற்கு வங்காளம் இந்திய துணைக்கண்ட கிழக்குப் பகுதிகள் |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்தியா, வங்காளதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | பாலாடைக் கட்டி (அ) சேனா, சர்க்கரை |
இதே போன்ற உணவுகள் | ஜிலேபி, |
தயாரிப்பு
தொகுஇந்தியா முழுவதும் பிரபலமான வழக்கமான ஜிலேபிகளைப் போலவே சேனா ஜிலேபியும் தயாரிக்கப்படுகிறது. இதனுடைய அடிப்படை மூலப்பொருளாகச் சேனா எனப்படும் புதிய தயிர் பாலாடைக்கட்டி ஆகும்.[1] சேனா நன்கு பிசைந்து, வறுக்கப்படுவதற்கு முன், ப்ரீட்செல் வடிவத்தில் சுருட்டப்படுகிறது. முழுமையாகப் பொறிக்கப்பட்ட சேனா ப்ரீட்செல்கள் சர்க்கரை பாகில் ஊறவைக்கப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sahu, Deepika (2012). "Discover Odisha's 'sweet' magic". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 1 February 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
chenna jilapi (A jalebi made with cheese)