ஜிலேபி (Jalebi,  zulbia, என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தெற்காசியா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ள ஒரு இனிப்பு உணவாகும். இது நன்கு வறுக்கப்பட்ட  மைதா மாவில் நீர்விட்டு குழை மாவாக்கி அந்த மாவைக் காய்ந்த எண்ணெயில் வட்டவடிவில் பிழிந்து பொறித்து,  அதைச் சர்கரைப் பாகில் இட்டு எடுத்து செய்யப்படுகிறது. இது குறிப்பாக ஈரான் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமாக உள்ளது.

ஜிலேபி
Jalebi
தேன்குழல்
மாற்றுப் பெயர்கள்Jilbi, Jilipi, Jhilapi, Jilapi (வங்காளி), Zelapi, Jilapir Pak, Jilebi (இந்தியா), Jilabi (மராத்தி), Jilawii, Zelepi (ஆசாமி), Zilafi (சில்ஹ்தி), Zoolbia (மத்திய கிழக்கு), Zalobai (பஷ்தூ), Jeri (நேபாளம்), Z'labia (துனிசியா), Mushabakh (எத்தியோபியா), Pani Walalu (இலங்கை)
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
பகுதிதெற்கு ஆசியா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிகா, கிழக்கு ஆப்பிரிகா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக அல்லது குளிர்ச்சியாக
முக்கிய சேர்பொருட்கள்மைதா, குங்குமப்பூ, நெய், சீனி
வேறுபாடுகள்ஜாங்கிரி அல்லது இம்பார்டி

இந்த இனிப்பு உணவை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறப்படுகிறது. அவற்றின்மீது படிந்த சர்க்கரைப்பாகு பூச்சானது சிலசமயம் படிகப்பூச்சு போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இதை நனைக்கும் சர்க்கரைப் பாகில் சில சமயம் சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு, மற்றும் பன்னீர் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. ஜிலேபியை தயிர் அல்லது ரபரி (வட இந்தியாவில்) போன்றவற்றுடன் சேர்த்தோ சாப்பிடுகின்றனர்.

பெயர்கள் தொகு

இந்த உணவு வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு அழைக்கப்படுகிறது இந்தி: जलेबी; நேபாளி: जेरी (Jeri), சமசுகிருதம்: सुधा-कुण्डलिका, மராத்தி: जिलबी வங்காள மொழி: জিলাপি; அசாமிய மொழி: জেলেপী (zelepi); குசராத்தி: જલેબી; கன்னடம்: ಜಿಲೇಬಿ; மலையாளம்: ജിലേബി; ஒடியா: ଝିଲାପି; பஞ்சாபி: ਜਲੇਬੀ; தமிழ்: தேன்குழல்; தெலுங்கு: జిలేబి; சிங்களம்: පැණි වළලු; சில்ஹ்டி ꠎꠤꠟꠣꠚꠤ Zilafi; சிந்தி மொழி: جلیبی‎; உருது: جلیبی; அசர்பைஜான்: zülbiyə (தெற்கு அசர்பைஜான்: زۆلبیه); பஷ்தூ: ځلوبۍ źəlobəi; பாரசீகம்: زولبیا zolbia; லூரி: زلهیبی zuleybi; அரபிக்: zalābiyah or zalebi; சோமாலி: Mushabbak, எகிப்திய அரபிக்: مِشَبٍك Meshabek, துனிசிய அரபிக்: Zlebia); தகலாகு: Jalebie; ஹராரி மொழி: ሙሻበኽ Mushabakh.

 
கேரள ஜிலேபி

வரலாறு தொகு

 
இந்தியாவின், மேற்கு வங்காளத்தின், ஹவுராவில் சூடான எண்ணெயில் பிழியப்படும் ஜிலேபி 

ஜிலேபியானது மேற்கு ஆசியாவில் இருந்த இதை ஒத்த ஒரு உணவு வகையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ஜிலேபி என்ற பெயரானது ஹாப்ஸன்-ஜாப்ஸனின் கூற்றுப்படி, அரபு மொழிச் சொல்லான ஜுலாபியா (Zulabiya) அல்லது பாரசீக மொழிச் சொல்லான ஸோல்பியா என்பதில் இருந்து பெறப்பட்டது. இவை ஜலேபியை ஒத்த உணவின் பெயராகும்.[1] மேற்கு ஆசியாவில் உள்ள கிருத்தவ சமூகங்களில், இது திஹோனி (மூவிராசாக்கள்திருநாள்) விருந்தில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டையுடன் வழங்கப்படுகிறது. ஈரானில், இது சோல்பிய்யா என அறியப்படுகிறது, ரமலானில் பாரம்பரியமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டு சமையல் நூல் ஜுலாபியா (zulubiya) செய்ய பல சமையல் குறிப்புகளைக் கொடுக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் பல இனிப்பு  சமையல் குறிப்புகள் உள்ளன, அதில்  முஹம்மது பின் ஹசன் அல் பாக்தாடியில் சமயல் நூலில் உள்ளதை இந்த உணவாக பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர்.[2]

 
ஜலீபி பாகிஸ்தானில் ஒரு பழைய மற்றும் பாரம்பரிய உணவு. மத மற்றும் திருமண விழாக்களில் மக்கள் இதை ரசிக்கிறார்கள்.

இந்த உணவானது மத்தியகால இந்தியாவுக்கு பாரசீக மொழி பேசும் துருக்கிய படையெடுப்பாளர்கள் கொண்டு வந்தனர்.[3] 15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில், ஜலேபியானது குண்டலிகா அல்லது ஜலவல்லிகா என அறியப்பட்டது.[4]:262   1450 இல் சைன எழுத்தாளரான ஜைனசுரா இயற்றிய பிரியம்கார்நாரகதா என்ற நூலில் பணக்கார வியாபாரிகளால் நடத்தப்பட்ட ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் ஜால்பிஸை இடம்பெற்றது குறிப்பிடுகிறது.:37 கி.பி. 1600 க்கு முந்தைய சமசுகிருத நூலான குன்யாகுநாதோபினி, உணவுப் பொருள்கள் மற்றும் செய்முறையை பட்டியலிடுகிறது; அதில் நவீன ஜிலேபியை தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிலேபி&oldid=3657700" இலிருந்து மீள்விக்கப்பட்டது