சிட்ரிக் அமிலம்

கரிம அமிலம்.

சிட்ரிக் அமிலம் (Citric acid) என்பது C6H8O7 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் அமிலமாகும்.[8] சிட்ரிக் காடி என்றும் இது அழைக்கப்படுகிறது. கனிம அமிலங்களுடன் ஒப்பிடுகையில் இது வலிமை குறைந்த அமிலமாக அறியப்படுகிறது.[8] சிட்ரிக் அமிலம் நிறமற்று காணப்படுகிறது. இயற்கையில் புளிப்புச் சுவை கொண்ட கிச்சிலி வகை பழங்களில் காணப்படுகிறது. உயிர் வேதியியலில் நிகழும் சிட்ரிக் அமில சுழற்சியில் உயிர்வளிநாட்ட உயிரினங்களின் வளர்சிதை மாற்ற செயல்முறையில் ஓர் இடைநிலைச் சேர்மமாக சிட்ரிக் அமிலம் உருவாகிறது.[8]

சிட்ரிக் அமிலம்
Citric acid

பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிட்ரிக் அமிலம்[1]
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலிக் அமிலம்[1]
இனங்காட்டிகள்
77-92-9 Y
ChEBI CHEBI:30769 Y
ChEMBL ChEMBL1261 Y
ChemSpider 305 Y
DrugBank DB04272 Y
EC number 201-069-1
InChI
  • InChI=1S/C6H8O7/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12) Y
    Key: KRKNYBCHXYNGOX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H8O7/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12)
    Key: KRKNYBCHXYNGOX-UHFFFAOYAM
IUPHAR/BPS
2478
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00037 Y
பப்கெம் 311
22230 (ஒற்றைநீரேற்று)
வே.ந.வி.ப எண் GE7350000
  • OC(=O)CC(O)(C(=O)O)CC(=O)O
UNII XF417D3PSL Y
பண்புகள்
C6H8O7
வாய்ப்பாட்டு எடை 192.123 கி/மோல் (நீரிலி), 210.14 கி/மோல் (ஒற்றைநீரேற்று)[2]
தோற்றம் வெண் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.665 கி/செ.மீ3 (நீரிலி)
1.542 கி/செ.மீ3 (18 °செ, (ஒற்றைநீரேற்று)
உருகுநிலை 156 °C (313 °F; 429 K)
கொதிநிலை 310 °C (590 °F; 583 K) 175 °செ வெப்பநிலையிலிருந்து சிதைவடையும்[3]
54% எ/எ (10 °C)
59.2% எ/எ (20 °C)
64.3% எ/எ (30 °C)
68.6% எ/எ (40 °C)
70.9% எ/எ (50 °செ)
73.5% எ/எ (60 °செ)
76.2% எ/எ (70 °செ)
78.8% எ/எ (80 °செ)
81.4% எ/எ (90 °செ)
84% எ/எ (100 °செ)[4]
கரைதிறன் அசிட்டோன், alcohol, ether, ஈத்தைல் அசிட்டேட்டு, இருமெத்தில் சல்பாக்சைடு போன்றவற்றில் கரையும்
C
6
H
6
, CHCl3, CS2, தொலுயீன் போன்றவற்றில் கரையாது.[3]
எத்தனால்-இல் கரைதிறன் 62 கி/100
amyl acetate-இல் கரைதிறன் 4.41 கி/100
diethyl ether-இல் கரைதிறன் 1.05 கி/100
1,4-ஈராக்சேன்-இல் கரைதிறன் 35.9 கி/100
மட. P −1.64
காடித்தன்மை எண் (pKa) pKa1 = 3.13[5]
pKa2 = 4.76[5]
pKa3 = 6.39,[6] 6.40[7]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.493–1.509 (20 °செ)[4]
1.46 (150 °C)[3]
பிசுக்குமை 6.5 cP (50% aq. sol.)[4]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1543.8 kJ/mol[4]
நியம மோலார்
எந்திரோப்பி So298
252.1 J/(மோல்·கெல்வின்)
வெப்பக் கொண்மை, C 226.51 யூல்/(மோல்·கெல்வின்) (26.85 °செல்சியசு)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தோல் மற்றும் கண்களில் எரிச்சல்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் HMDB
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal word எச்சரிக்கை
H290, H319, H315[5]
P305+351+338[5]
தீப்பற்றும் வெப்பநிலை 155 °C (311 °F; 428 K)
Autoignition
temperature
345 °C (653 °F; 618 K)
வெடிபொருள் வரம்புகள் 8%[5]
Lethal dose or concentration (LD, LC):
3000 மி.கி/கி.கி (எலிகள், வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மில்லியன் டன் சிட்ரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓர் அமிலமாக்கியாகவும், சுவையூட்டும் பொருளாகவும், கொடுக்கிணைப்புக் கரணியாகவும் சிட்ரிக் அமிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [9]

சிட்ரேட்டு என்ப்படுவது சிட்ரிக் அமிலத்தினுடைய ஒரு வழிப்பெறுதியாகும். அதாவது சிட்ரிக் அமிலத்தின் உப்புகள் அல்லது எசுத்தர்கள் சிட்ரேட்டுகள் எனப்படுகின்றன. சிட்ரேட்டு என்பது ஒரு பல்லணு அயனியாகும். முச்சோடியம் சிட்ரேட்டை உப்புக்கு எடுத்துக்காட்டாவும், மூவெத்தில் சிட்ரேட்டை எசுத்தருக்கு எடுத்துக்காட்டாகவும் கூறலாம். உப்பினுடைய ஒரு பகுதியாக இருக்கும்போது சிட்ரேட்டின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை C
6
H
5
O3−
7
அல்லது C
3
H
5
O(COO)3−
3
என்று எழுதலாம்.

இயற்கைத் தோற்றம்

தொகு
 
எலுமிச்சை, ஆரஞ்சு, தேசிப்பழம் போன்ற கிச்சிலி வகை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் செறிவு அதிக அளவில் உள்ளது

எலுமிச்சை, ஆரஞ்சு, தேசிப்பழம் போன்ற கிச்சிலி வகை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் செறிவு அதிக அளவில் உள்ளது. சிட்ரிக் அமிலம் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில், குறிப்பாக கிச்சிலி வகை பழங்களில் அதிகமாக காணப்படுகிறது. எலுமிச்சை மற்றும் தேசிப்பழங்களில் அதிக செறிவுகளில் சிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சைப் பழத்தின் உலர் எடையில் 8 சதவீதம் சிட்ரிக் அமிலமாக இருக்கும் (47கி/லி) எனவும் அளவிடப்பட்டுள்ளது.[10] ஆரஞ்சுப் பழம் மற்றும் திராட்சைப் ப்ழங்களில் சிட்ரிக் அமிலத்தின் செறிவு 0.005 மோல்/லி என்ற அளவிலும் எலுமிச்சை மற்றும் தேசிப்பழங்களில் இச்செறிவு 0.30 மோல்/லிட்டர் என்ற அளவிலும் வேறுபடுகிறது. இந்த மதிப்புகள் பயிர் வகை மற்றும் பழம் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து ஒரே இனங்களுக்குள்லேயும் கூட மாறுபடும்.

சிட்ரிக் அமிலம் முதன்முதலில் 1784 ஆம் ஆண்டில் வேதியியலாளர் கார்ல் வில்லெம் சீலே என்பவரால் தனிமைப்படுத்தப்பட்டது. அவர் அதை எலுமிச்சை சாற்றில் இருந்து படிகமாக்கினார்.[11][12]

தொழில்துறை அளவு

தொகு

தொழில்துறை அளவிலான சிட்ரிக் அமில உற்பத்தி முதன்முதலில் இத்தாலிய கிச்சிலிப் பழத் தொழிலின் அடிப்படையில் 1890 ஆம் ஆண்டு தொடங்கியது. பழச்சாற்றுடன் நீரேற்றப்பட்ட சுண்ணாம்பை (கால்சியம் ஐதராக்சைடு) சேற்த்து சூடாக்கப்பட்டு கால்சியம் சிட்ரேட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் இது தனிமைப்படுத்தப்பட்டு நீர்த்த கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி மீண்டும் சிட்ரிக் அமிலமாக மாற்றப்பட்டது.[13]

1917 ஆம் ஆண்டில், அசுபெர்கிலசு நைசரின் போன்ற சில பூஞ்சை விகாரங்கள் திறம்வாய்ந்த சிட்ரிக் அமில உற்பத்தியாளர்களாக இருக்கலாம் என்பதை அமெரிக்க உணவு வேதியியலாளர் இயேம்சு கியூரி கண்டுபிடித்தார்.[14] மற்றும் மருந்து நிறுவனமான பைசர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்துறை அளவிலான சிட்ரிக் அமில உற்பத்தியைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 1929 ஆம் ஆண்டில் சிட்ரிக் பெல்சு நிறுவனமும் இந்நடவடிக்கையில் இறங்கியது.

சிட்ரிக் அமிலம் தயாரிப்பதற்கான முக்கிய தொழில்துறை வழிமுறையாக இன்றும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. அசுபெரிகசு நைகர் பூஞ்சை சுக்ரோசு அல்லது குளுக்கோசு கொண்ட ஊடகத்தில் சேர்க்கப்பட்டு சிட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. மதுபானம், வெல்லப்பாகு, நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்ட சோள மாவு அல்லது பிற மலிவான, சர்க்கரை கரைசல் போன்றவை இச்சக்கரைகளுக்கான ஆதார மூலங்களாகும்.[15] வினையில் உருவான விளைபொருளிலிருந்து பூஞ்சையை வடிகட்டியபிறகு சிட்ரிக் அமிலம் தயாரிக்க கால்சியம் ஐதராக்சைடு சேர்க்கப்படுகிறது. உருவாகும் கால்சியம் சிட்ரேட்டுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடாக்கினால் கிச்சிலிப் பழவகை சாறுகளிலிருந்து நேரடியாகப் பிரித்தெடுப்பதைப் போலவே சிட்ரிக் அமிலம் கிடைக்கிறது.

2018 ஆம் ஆண்டில் உலகளாவிய சிட்ரிக் அமில உற்பத்தி 2,000,000 டன்களுக்கு மேல் இருந்தது.[16] இந்த அளவின் 50 சதவீதத்திற்கும் அதிகமா சிட்ரிக் அமிலம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. பானங்களில் அமிலத்தன்மை சீராக்கியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்பட்டது. மற்ற உணவுப் பயன்பாடுகளுக்கு 20 சதவீதமும், 20 சதவீதம் சலைவைத் தொழிலுக்காகவும், எஞ்சியுள்ள 10 சதவீதமும் அழகியல், மருந்து மற்றும் வேதித்துறையிலும் பயன்படுத்தப்பட்டது.[13]

வேதிப்பண்புகள்

தொகு
 
சிட்ரிக் அமிலத்தின் 10-மில்லிமோலார் கரைசலுக்கான விவரக்குறிப்பு வரைபடம்

சிட்ரிக் அமிலம் நீரற்ற நீரிலி வடிவமாகவோ அல்லது ஒற்றைநீரேற்றாகவோ தயாரிக்கப்படுகிறது. நீரற்ற வடிவம் சூடான நீரில் இருந்து படிகமாக்குகிறது, அதே நேரத்தில் சிட்ரிக் அமிலம் குளிர்ந்த நீரில் இருந்து படிகமாக்கப்படும் போது ஒற்றைநீரேற்று உருவாகிறது. ஒற்றைநீரேற்றை சுமார் 78 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றி நீரற்ற வடிவமாக மாற்றலாம். சிட்ரிக் அமிலம் முழுமையான (நீரற்ற) எத்தனாலில் (எத்தனாலின் 100 பாகங்களுக்கு 76 பாகங்கள் சிட்ரிக் அமிலம்) என்ற அளவில் 15 ° செல்சியசு வெப்பநிலையில் கரைகிறது. சுமார் 175 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் கார்பன் டை ஆக்சைடு இழப்புடன் சிதைகிறது.

சிட்ரிக் அமிலம் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் 3.128, 4.761 மற்றும் 6.396 இன் சுழிய அயனி வலிமைக்கு கூடுதலாக்கப்பட்ட காடித்தன்மை எண் மதிப்புகளைக் கொண்ட ஒரு மும்மூல அமிலமாகும். [17] ஐதராக்சில் குழுவின் காடித்தன்மை எண் மதிப்பு 14.4 என கார்பன்-13 அணு காந்த அதிர்வு மூலம் கண்டறியப்பட்டது. [18] சிட்ரிக் அமிலத்தின் கரைசல்கள் காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பு 2 மற்றும் 8 என்ற அளவுக்கு இடையில் உள்ள தாங்கல் கரைசல்களாகும் என்பதை அருகிலுள்ள விவரக்குறிப்பு வரைபடம் காட்டுகிறது. காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பு 7 என்ற அளவைச் சுற்றியுள்ள உயிரியல் அமைப்புகளில், சிட்ரேட் அயனி மற்றும் மோனோ-ஐதரசன் சிட்ரேட்டு அயனி ஆகிய இரண்டு இனங்கள் உள்ளன. உப்பு சோடியம் சிட்ரேட் 20எக்சு என்ற அடர்த்தி கொண்ட தாங்கல் கரைசல் பொதுவான பயன்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[19] உயிர்வேதியியல் ஆய்வுகளுக்காக தொகுக்கப்பட்ட அட்டவணைகள் கிடைக்கின்றன.[20]

மறுபுறம், சிட்ரிக் அமிலத்தின் 1 மில்லிமோலார் கரைசலின் காடித்தன்மை எண் மதிப்பு 3.2 ஆக இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற கிச்சிலி வகை பழங்களின் பழச்சாறுகளின் காடித்தன்மை எண் சிட்ரிக் அமிலத்தின் செறிவைச் சார்ந்து உள்ளது. சிட்ரிக் அமிலத்தின் அதிக செறிவு குறைந்த காடித்தன்மை எண்ணை ஏற்படுத்துகிறது.

சேர்மத்தை படிகமாக்குவதற்கு முன் காடித்தன்மை எண்ணை கவனமாக சரிசெய்வதன் மூலம் சிட்ரிக் அமிலத்தின் அமில உப்புகளை தயாரிக்க முடியும். உதாரணத்திற்கு சோடியம் சிட்ரேட்டு தயாரிப்பை பார்க்கவும்.

சிட்ரேட்டு அயனி உலோக நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. கொடுக்கிணைப்பு விளைவு காரணமாக இந்த அணைவுச் சேர்மங்கலின் உருவாக்கத்திற்கான நிலைத்தன்மை மாறிலிகள் மிகவும் அதிகமாகும். இதன் விளைவாக, சிட்ரேட்டு அயனி கார உலோக நேர்மின் அயனிகளுடன் கூட அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. இருப்பினும், மூன்று கார்பாக்சிலேட்டு குழுக்களையும் பயன்படுத்தி ஒரு கொடுக்கிணைப்பு அணைவுச் சேர்மம் உருவாகும்போது, கொடுக்கிணைப்பு வளையங்கள் 7 மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. இவை பொதுவாக சிறிய கொடுக்கிணைப்பு வளையங்களை விட வெப்ப இயக்கவியல் ரீதியாக குறைவான நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். இதன் விளைவாக, அம்மோனியம் பெரிக் சிட்ரேட்டில் உள்ளது போலவே, ((NH
4
)
5
Fe(C
6
H
4
O
7
)
2
·2H
2
O
).[21] ஐதராக்சில் குழுவானது புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டு அதிக நிலைப்புத் தன்மை கொண்ட 5 உறுப்பினர் கொடுக்கிணைப்பு வளையம் கொண்டதாக உருவாகும்.

சிட்ரிக் அமிலமானது அதன் மூன்று கார்பாக்சிலிக் அமிலக் குழுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் எசுத்தராக்கம் செய்யப்பட்டு பல்வேறு வகையான ஒற்றை-, இரட்டை-, மூன்று- மற்றும் கலப்பு எசுத்தர்களை உருவாக்குகிறது. [22]

உயிர்வேதியியல்

தொகு

சிட்ரிக் அமில சுழற்சி

தொகு

சிட்ரேட்டு என்பது சிட்ரிக் அமில சுழற்சியில் ஓர் இடைநிலை விளைபொருளாகும். முக்கார்பாக்சிலிக் அமில சுழற்சி அல்லது கிரெப்சு சுழற்சி என்றும் இது அழைக்கப்படுகிறது. இச்சுழற்சியானது விலங்குகள், தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கான மைய வளர்சிதை மாற்ற பாதையாகும். சிட்ரேட் சிந்தேசு நொதி ஆக்சலோ அசிட்டேட்டின் ஒடுக்கத்தை அசிடைல் இணை நொதி A உடன் இணைந்து சிட்ரேட்டு உருவாக்கத்திற்கு வினையூக்கம் செய்கிறது. சிட்ரேட்டு பின்னர் அகோனிடேசின் அடி மூலக்கூறாக செயல்பட்டு அகோனிடிக் அமிலமாக மாற்றப்படுகிறது. ஆக்சலோ அசிட்டேட்டின் மீளுருவாக்கம் மூலம் சுழற்சி முடிவடைகிறது. இரசாயன வினைகளின் தொடர் என்பது உயர்ந்த உயிரினங்களில் உள்ள உணவில் இருந்து பெறப்பட்ட ஆற்றலில் மூன்றில் இரண்டு பங்கின் மூலமாகும். ஆன்சு அடோல்ஃப் கிரெப்சு இந்த கண்டுபிடிப்புக்காக 1953 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

குறிப்பாக ஈ. கோலை போன்ற சில பாக்டீரியாக்கள் அவற்றின் முக்கார்பாக்சிலிக் அமிலச் சுழற்சியின் ஒரு பகுதியாக சிட்ரேட்டை தங்களுக்குள்ளேயே உற்பத்தி செய்து உட்கொள்ளலாம். ஆனால் உயிரணுவிற்குள் இறக்குமதி செய்யத் தேவையான நொதிகள் இல்லாததால் அந்த உணவை அவற்றால் உணவாகப் பயன்படுத்த முடியாது. இரிச்சர்டு லென்சுகியின் நீண்ட கால பரிணாம பரிசோதனையின் போது சிட்ரேட்டைக் கொண்ட குறைந்தபட்ச குளுக்கோசு ஊடகத்தில் பல்லாயிரக்கணக்கான பரிணாமங்களுக்குப் பிறகு, சிட்ரேட்டின் மீது உயிர்வளி நாட்ட முறையில் வளரும் திறனுடன் ஒரு மாறுபாடு ஈ.கோலை உருவானது. லென்சுகியின் மாணவர் சக்கரி பிளவுண்ட்டு மற்றும் சக பணியாளர்கள் இந்த புதிய மாறுபாட்டு பாக்டீரியாவை பண்புகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தனர்.[23][24] பல முந்தைய "சாத்தியமான" பிறழ்வுகளின் குவிப்பு காரணமாக ஓர் அரிய நகல் பிறழ்வு காரணமாக இந்த தோற்றம் ஏற்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களை அவர்கள் கண்டறிந்தனர். அதன் அடையாளம் மற்றும் விளைவுகள் இன்னும் ஆய்வில் உள்ளன. புதிய பாக்டீரியா பண்பின் பரிணாமம், பரிணாம வளர்ச்சியில் வரலாற்று தற்செயல்களின் பங்கிற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகக் கருதப்படுகிறது.

பயன்பாடுகள்

தொகு

உணவும் பானமும்

தொகு
 
எலுமிச்சை மிளகு மசாலா தயாரிக்க தூள் வடிவ சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது

சிட்ரிக் அமிலம் வலிமையான உண்ணக்கூடிய அமிலங்களில் ஒன்றாக இருப்பதால், சிட்ரிக் அமிலத்தின் ஆதிக்கம் உணவு மற்றும் பானங்கள், குறிப்பாக குளிர்பானங்கள் மற்றும் மிட்டாய்களில் ஒரு சுவையூட்டும் பொருளாகவும் பாதுகாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[13] ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இதன் எண் ஈ330 என்ற எண்னால் குறிக்கப்படுகிறது. பல்வேறு உலோகங்களின் சிட்ரேட் உப்புகள் அந்த தாதுக்களை உயிரியல் ரீதியாக கிடைக்கக்கூடிய வடிவத்தில் பல உணவுப் பொருட்களில் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன. சிட்ரிக் அமிலம் 100 கிராமுக்கு 247 கிலோகலோரி ஆற்றலை கொண்டுள்ளது[25] அமெரிக்காவில் சிட்ரிக் அமிலத்திற்கான தூய்மைத் தேவைகள் உணவுச் சேர்க்கைக்கான உணவு இரசாயனங்கள் ஆவணங்களில் வரையறுக்கப்படுகின்றன. அமெரிக்க்காவின் மருத்துவ செய்ட்தி இதழிதை வெளியிட்டது.

சிட்ரிக் அமிலம் பனிக்கூழில் கொழுப்புகளை பிரிக்காமல் இருக்க ஒரு குழம்பாக்கும் முகவராகவும், சுக்ரோசு படிகமயமாக்கலைத் தடுக்க சர்க்கரையில் அல்லது புதிய எலுமிச்சை சாறுக்கு பதிலாக சமையலில் சேர்க்கலாம். சிட்ரிக் அமிலம் சோடியம் பைகார்பனேட்டுடன் பலவிதமான உட்கொள்ளும் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது, (எ.கா. பொடிகள் மற்றும் மாத்திரைகள்) மற்றும் தனிப்பட்ட உடல்நல பொருட்கள் (எ.கா., குளியல் சோப்புகள், அழுக்கு நீக்கிகள்) போன்றவை எடுத்துக் காட்டுகளாகும். உலர் தூள் வடிவில் விற்கப்படும் சிட்ரிக் அமிலம் பொதுவாக சந்தைகளில் மற்றும் மளிகை கடைகளில் "புளிப்பு உப்பு" என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதன் தோற்றம் சாதாரண உப்புடன் ஒத்திருக்கிறது.

துப்புரவு மற்றும் கொடுக்கிணைப்பு முகவர்

தொகு
 
இரும்பு(III) சிட்ரேட்டு அணைவுச் சேர்மத்தின் அமைப்பு[26][27]

சிட்ரிக் அமிலம் ஒரு சிறந்த கொடுக்கிணைப்பு முகவராகும். இது உலோகங்களை கரையக்கூடியதாக உருவாக்கி பிணைக்கிறது. கொதிகலன்கள் மற்றும் ஆவியாக்கிகளில் இருந்து சுண்ணாம்பு அளவைக் குறைக்கவும் ஊக்கப்படுத்தவும் இது பயன்படுகிறது.[13] சிட்ரிக் அமிலம் தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சோப்புகள் மற்றும் சலவை சோப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கடின நீரில் உலோகங்களை கொடுக்கிணைப்பு மூலம் பிணைப்பதால் சலவை சோப்புகள் நுரையை உருவாக்கி, தண்ணீரை மென்மையாக்கும் தேவையின்றி சிறப்பாக செயல்பட உதவுகிறது. சில குளியலறை மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும் கரைசல்களில் சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலத்தின் ஆறு சதவீத செறிவு கொண்ட ஒரு கரைசல் கண்ணாடியிலிருந்து கடினமான நீர் கறைகளை தேய்க்காமலேயே அகற்றும். சிட்ரிக் அமிலம் முடிக்கழுவிகளில் உள்ள சிட்ரிக் அமிலம் தலைமுடியிலிருந்து மெழுகு மற்றும் நிறத்தை கழுவுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. 1940 ஆம் ஆண்டுகளில் மன்காட்டன் திட்டத்தின் போது, ​​இலாந்தனைடுகளின் மொத்த அயனி-பரிமாற்றப் பிரித்தலுக்கு சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்பட்டது.[28] 1950 ஆம் ஆண்டுகளில் இதற்கு மாற்று கண்டறியப்பட்டது.[29]

தொழில்துறையில், இது எஃகு துருவைக் கரைக்கவும், துருப்பிடிக்காத எஃகுகளை செயலிழக்கச் செய்யவும் பயன்படுகிறது.[30]

அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், உணவுசேர் பொருட்கள் மற்றும் உணவுகள்

தொகு

பாலேடு, கூழ்மங்கள், நீர்மங்கள் போன்றவற்றில் அமிலத்தன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுகள் மற்றும் உணவு சேர் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அமிலத்தன்மை, கொடுக்கிணைப்பு முகவர், பாகுமையாக்குதல் போன்ற தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு விளைவுக்காக சேர்க்கப்பட்டால், இதை ஒரு செயலாக்கி என்ற பிரிவாக வகைப்படுத்தப்படலாம்.

சிட்ரிக் அமிலம் ஒரு ஆல்பா ஐதராக்சி அமிலம் மற்றும் இரசாயன தோல் உரித்தல்களில் செயலில் உள்ள பொருளாகும்.[31]

சிட்ரிக் அமிலம் பொதுவாக பழுப்பு எராயினின் கரைதிறனை அதிகரிக்க ஓர் இடையகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[32]

வைரசு எதிர்ப்புப் பண்புகள் கொண்ட முக திசுக்களின் உற்பத்தியில் செயலில் உள்ள பொருட்களில் ஒன்றாக சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.[33]

 

பிற பயன்கள்

தொகு

சிட்ரேட்டுகளின் தாங்கல் பண்புகள் வீட்டு துப்புரவாக்கிகள் மற்றும் மருந்துகளில் காடித்தன்மை எண் மதிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

சிட்ரிக் அமிலம் வெள்ளை வினிகருக்கு மணமற்ற மாற்றாக அமில சாயங்களுடன் துணி சாயமிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் சிட்ரேட்டு என்பது பெனடிக்ட்டின் வினைப்பொருளின் ஓர் அங்கமாகும். இது சர்க்கரைகளைக் குறைக்கும் அலவறி மற்றும் பண்பறி பகுப்பாய்ய்வுகள் இரன்டிலும் அடையாளங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[34][35]

துருப்பிடிக்காத எஃகு செயலிழக்க நைட்ரிக் அமிலத்திற்கு மாற்றாக சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம்.[36]

புகைப்படத் திரைப்படத்தை உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக சிட்ரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. புகைப்படம் உருவாக்கும் கரைசல்கள் காரத்தன்மை கொண்டவையாகும். எனவே ஒரு இலேசான அமிலம் அவற்றின் செயலை விரைவாக நடுநிலையாக்க மற்றும் நிலைநிறுத்தப் பயன்படுகிறது. ஆனால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அசிட்டிக் அமிலம் இருண்ட அறையில் ஒரு வலுவான வினிகர் வாசனையை விட்டுச்செல்கிறது.[37]

சிட்ரிக் அமிலம்/பொட்டாசியம்-சோடியம் சிட்ரேட்டை இரத்த அமில சீராக்கியாகப் பயன்படுத்தலாம். சுவையை மேம்படுத்த சிட்ரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது.[38]

உலர்ந்த அல்லது தண்ணீரில் செறிவூட்டப்பட்ட சிட்ரிக் அமிலம் ஒரு சிறந்த பற்றவைப்பு இளக்கியாகும். [39] பற்றவைப்பிற்குப் பின்னர், குறிப்பாக தீப்பற்றக்கூடிய மெல்லிய கம்பிகளால் பற்றவைக்கப்பட்ட பின்னர் உடனடியாக சிட்ரிக் அமிலம் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இது இலேசாக அரிக்கும். இது சூடான நீரில் விரைவாக கரையவும் செய்யும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்க கார சிட்ரேட்டை பயன்படுத்தலாம். சிறுநீர் சிட்ரேட் அளவை அதிகரிப்பதன் மூலம், கால்சியம் கற்களைத் தடுப்பதற்கும், சிறுநீரின் காடித்தன்மை மதிப்பை அதிகரிப்பதன் மூலமும், யூரிக் அமிலம் மற்றும் சிசுட்டைன் கற்களைத் தடுப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.[40]

கரிமச் சேர்மங்கள் தயாரிப்பில்

தொகு

சிட்ரிக் அமிலம் பல கரிமச் சேர்மங்கள் தயாரிப்பில் ஒரு பல்துறை முன்னோடிச் சேர்மமாகும். நீர் நீக்க வழிகள் இட்டாகோனிக் அமிலத்தையும் அதன் நீரிலியையும் தருகின்றன.[41] இட்டாகோனிக் அமில நீரிலியின் வெப்ப மாற்றியத்தின் மூலம் சிட்ராகோனிக் அமிலம் தயாரிக்கலாம்.[42] சிட்ரிக் அமிலத்தை உலர் வடித்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் தேவையான இட்டாகோனிக் அமில நீரிலி பெறப்படுகிறது. கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி சிட்ரிக் அமிலத்திலிருந்து நீர்நீக்கம் செய்து அகோனிடிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. :[43]

(HO2CCH2)2C(OH)CO2H → HO2CCH=C(CO2H)CH2CO2H + H2O

சிட்ரிக் அமிலத்தை புகையும் கந்தக அமிலத்தில் கார்பனைல் நீக்கம் செய்து அசிட்டோன் டைகார்பாக்சிலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[44]

பாதுகாப்பு

தொகு

சிட்ரிக் அமிலம் ஒரு பலவீனமான அமிலம் என்றாலும், தூய சிட்ரிக் அமிலத்தின் வெளிப்பாடு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். உள்ளிழுப்பதால் இருமல், மூச்சுத் திணறல் அல்லது தொண்டை புண் ஏற்படலாம். அதிகமாக உட்கொண்டால் வயிற்று வலி மற்றும் தொண்டை வலி ஏற்படலாம். தோல் மற்றும் கண்களுக்கு செறிவூட்டப்பட்ட கரைசல்களின் வெளிப்பாடு சிவத்தல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.[45] நீண்ட கால அல்லது மீண்டும் மீண்டும் சாப்பிடுவது பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.[45][46][47]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 747. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. CID 22230 பப்கெம்-இல் இருந்து
  3. 3.0 3.1 3.2 "citric acid". chemister.ru. Archived from the original on November 29, 2014. பார்க்கப்பட்ட நாள் June 1, 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 CID 311 பப்கெம்-இல் இருந்து
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Fisher Scientific, Citric acid. Retrieved on 2014-06-02.
  6. "Data for Biochemical Research". ZirChrom Separations, Inc. பார்க்கப்பட்ட நாள் January 11, 2012.
  7. "Ionization Constants of Organic Acids". Michigan State University. பார்க்கப்பட்ட நாள் January 11, 2012.
  8. 8.0 8.1 8.2 "Citric acid | C6H8O7 - PubChem". Archived from the original on January 19, 2022. பார்க்கப்பட்ட நாள் December 19, 2021.
  9. Apleblat, Alexander (2014). Citric acid. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-11232-9.
  10. "Quantitative Assessment of Citric Acid in Lemon Juice, Lime Juice, and Commercially-Available Fruit Juice Products". Journal of Endourology 22 (3): 567–570. 2008. doi:10.1089/end.2007.0304. பப்மெட்:18290732. 
  11. Scheele, Carl Wilhelm (1784). "Anmärkning om Citron-saft, samt sätt at crystallisera densamma" (in sv). Kungliga Vetenskaps Academiens Nya Handlingar [New Proceedings of the Royal Academy of Science]. 2nd series 5: 105–109. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015009215438;view=1up;seq=115. 
  12. Graham, Thomas (1842). Elements of chemistry, including the applications of the science in the arts. Hippolyte Baillière, foreign bookseller to the Royal College of Surgeons, and to the Royal Society, 219, Regent Street. p. 944. பார்க்கப்பட்ட நாள் June 4, 2010.
  13. 13.0 13.1 13.2 13.3 Verhoff, Frank H.; Bauweleers, Hugo (2005), "Citric Acid", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a07_103.pub3
  14. Currie, James (1917). The Journal of Biological Chemistry (in ஆங்கிலம்). American Society for Biochemistry and Molecular Biology. pp. 15–27.
  15. Lotfy, Walid A.; Ghanem, Khaled M.; El-Helow, Ehab R. (2007). "Citric acid production by a novel Aspergillus niger isolate: II. Optimization of process parameters through statistical experimental designs". Bioresource Technology 98 (18): 3470–3477. doi:10.1016/j.biortech.2006.11.032. பப்மெட்:17317159. 
  16. "Global Citric Acid Markets Report, 2011-2018 & 2019-2024". prnewswire.com. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.
  17. Goldberg, Robert N.; Kishore, Nand; Lennen, Rebecca M. (2002). "Thermodynamic Quantities for the Ionization Reactions of Buffers". J. Phys. Chem. Ref. Data 31 (1): 231–370. doi:10.1063/1.1416902. Bibcode: 2002JPCRD..31..231G. 
  18. Silva, Andre M. N.; Kong, Xiaole; Hider, Robert C. (2009). "Determination of the pKa value of the hydroxyl group in the α-hydroxycarboxylates citrate, malate and lactate by 13C NMR: implications for metal coordination in biological systems". Biometals 22 (5): 771–778. doi:10.1007/s10534-009-9224-5. பப்மெட்:19288211. 
  19. Maniatis, T.; Fritsch, E. F.; Sambrook, J. 1982. Molecular Cloning: A Laboratory Manual. Cold Spring Harbor Laboratory, Cold Spring Harbor, NY.
  20. Gomori, G. (1955). "16 Preparation of buffers for use in enzyme studies". Methods in Enzymology Volume 1. Methods in Enzymology. Vol. 1. pp. 138–146. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0076-6879(55)01020-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780121818012.
  21. Matzapetakis, M.; Raptopoulou, C. P.; Tsohos, A.; Papaefthymiou, V.; Moon, S. N.; Salifoglou, A. (1998). "Synthesis, Spectroscopic and Structural Characterization of the First Mononuclear, Water Soluble Iron−Citrate Complex, (NH4)5Fe(C6H4O7)2·2H2O". J. Am. Chem. Soc. 120 (50): 13266–13267. doi:10.1021/ja9807035. 
  22. Bergeron, Raymond J.; Xin, Meiguo; Smith, Richard E.; Wollenweber, Markus; McManis, James S.; Ludin, Christian; Abboud, Khalil A. (1997). "Total synthesis of rhizoferrin, an iron chelator". Tetrahedron 53 (2): 427–434. doi:10.1016/S0040-4020(96)01061-7. 
  23. Powell, Alvin (February 14, 2014). "59,000 generations of bacteria, plus freezer, yield startling results". phys.org. பார்க்கப்பட்ட நாள் April 13, 2017.
  24. Blount, Z. D.; Borland, C. Z.; Lenski, R. E. (4 June 2008). "Historical contingency and the evolution of a key innovation in an experimental population of Escherichia coli". Proceedings of the National Academy of Sciences 105 (23): 7899–7906. doi:10.1073/pnas.0803151105. பப்மெட்:18524956. Bibcode: 2008PNAS..105.7899B. 
  25. Greenfield, Heather; Southgate, D.A.T. (2003). Food Composition Data: Production, Management and Use. Rome: FAO. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789251049495.
  26. Xiang Hao, Yongge Wei, Shiwei Zhang (2001): "Synthesis, crystal structure and magnetic property of a binuclear iron(III) citrate complex". Transition Metal Chemistry, volume 26, issue 4, pages 384–387. எஆசு:10.1023/A:1011055306645
  27. Shweky, Itzhak; Bino, Avi; Goldberg, David P.; Lippard, Stephen J. (1994). "Syntheses, Structures, and Magnetic Properties of Two Dinuclear Iron(III) Citrate Complexes". Inorganic Chemistry 33 (23): 5161–5162. doi:10.1021/ic00101a001. 
  28. JOHNSON, WARREN C.; QUILL, LAURENCE L.; DANIELS, FARRINGTON (1947-09-01). "Rare Earths Separation Developed on Manhattan Project". Chemical & Engineering News Archive 25 (35): 2494. doi:10.1021/cen-v025n035.p2494. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2347. http://dx.doi.org/10.1021/cen-v025n035.p2494. 
  29. Saleem, Muhammad Hamzah; Ali, Shafaqat; Rehman, Muzammal; Rizwan, Muhammad; Kamran, Muhammad; Mohamed, Ibrahim A.A.; Khan, Zaid; Bamagoos, Atif A. et al. (2020-08-01). "Individual and combined application of EDTA and citric acid assisted phytoextraction of copper using jute (Corchorus capsularis L.) seedlings" (in en). Environmental Technology & Innovation 19: 100895. doi:10.1016/j.eti.2020.100895. பன்னாட்டுத் தர தொடர் எண்:2352-1864. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2352186420300274. 
  30. "ASTM A967 / A967M - 17 Standard Specification for Chemical Passivation Treatments for Stainless Steel Parts". www.astm.org.
  31. Tang, Sheau-Chung; Yang, Jen-Hung (2018-04-10). "Dual Effects of Alpha-Hydroxy Acids on the Skin". Molecules 23 (4): 863. doi:10.3390/molecules23040863. பன்னாட்டுத் தர தொடர் எண்:1420-3049. பப்மெட்:29642579. 
  32. "Different forms of heroin and their relationship to cook-up techniques: data on, and explanation of, use of lemon juice and other acids". Subst Use Misuse 36 (5): 573–88. April 2001. doi:10.1081/ja-100103561. பப்மெட்:11419488. 
  33. "Tissues that fight germs". CNN. July 14, 2004. https://money.cnn.com/2004/07/14/news/fortune500/kleenex/. 
  34. Chen, Wei; Abramowitz, Matthew K. (February 2014). "Treatment of Metabolic Acidosis in Patients With CKD". American Journal of Kidney Diseases 63 (2): 311–317. doi:10.1053/j.ajkd.2013.06.017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-6386. பப்மெட்:23932089. 
  35. Chen, Wei; Abramowitz, Matthew K. (February 2014). "Treatment of Metabolic Acidosis in Patients With CKD". American Journal of Kidney Diseases 63 (2): 311–317. doi:10.1053/j.ajkd.2013.06.017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-6386. பப்மெட்:23932089. 
  36. "Pickling and Passivating Stainless Steel" (PDF). Euro-inox.org. Archived from the original (PDF) on September 12, 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  37. Anchell, Steve. "The Darkroom Cookbook: 3rd Edition (Paperback)". Focal Press. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  38. PubChem. "Sodium citrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
  39. "An Investigation of the Chemistry of Citric Acid in Military Soldering Applications" (PDF). 1995-06-19. Archived (PDF) from the original on March 15, 2020.
  40. Berg, C.; Larsson, L.; Tiselius, H. G. (1992). "The effects of a single evening dose of alkaline citrate on urine composition and calcium stone formation". The Journal of Urology 148 (3 Pt 2): 979–985. doi:10.1016/s0022-5347(17)36795-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5347. பப்மெட்:1507355. https://pubmed.ncbi.nlm.nih.gov/1507355/. 
  41. R. L. Shriner; S. G. Ford; l. J. Roll (1931). "Itaconic anhydride and itaconic acid". Org. Synth. 11: 70. doi:10.15227/orgsyn.1.0070. 
  42. R. L. Shriner; S. G. Ford; l. J. Roll (1931). "Citraconic Anhydride and Citraconic Acid". Org. Synth. 28: 28. doi:10.15227/orgsyn.011.0028. 
  43. Bruce, W. F. (1937). "Aconitic Acid". Organic Syntheses 17: 1. doi:10.15227/orgsyn.017.0001. 
  44. Roger Adams; H. M. Chiles; C. F. Rassweiler (1925). "Acetonedicarboxylic Acid". Organic Syntheses 5: 5. doi:10.15227/orgsyn.005.0005. 
  45. 45.0 45.1 "Citric acid". International Chemical Safety Cards. NIOSH. 2018-09-18. Archived from the original on July 12, 2018. பார்க்கப்பட்ட நாள் September 9, 2017.
  46. J. Zheng; F. Xiao; L. M. Qian; Z. R. Zhou (December 2009). "Erosion behavior of human tooth enamel in citric acid solution". Tribology International 42 (11–12): 1558–1564. doi:10.1016/j.triboint.2008.12.008. 
  47. "Effect of Citric Acid on Tooth Enamel".

குறிப்புதவிகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரிக்_அமிலம்&oldid=3635097" இலிருந்து மீள்விக்கப்பட்டது