உடலியக்க மருத்துவம்

இயன்முறை மருத்துவம் அல்லது உடலியக்க மருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (physical therapy, physiotherapy) முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தில்லா சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.

இயன்முறை மருத்துவம்
Physical therapy / physiotherapy
சமநிலைப் பிரச்சனைகள், முடவியல்வ் உறுப்பு நீக்கம், நோயாளியின் வலிமை, விறைப்புத் தன்மை, கூட்டு வரம்பு இயக்க சமநிலை மற்றும் நடை ஆகியவற்றை ஆய்வு செய்தல் ஆகியவற்றில் நோயாளிகளுடன் பணிபுரியும் இராணுவ உடலியக்க மருத்துவர்கள்]]
ICD-9-CM93.0-93.3
MeSHD026761

இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள்/வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[1] இயன்முறை மருத்துவம் (physical medicine)[2] என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்தவ துறை & மருத்துவ முறையாகும்.

விளக்கம்

தொகு
 
இயக்கு அசைவு உடற்பயிற்சி

பிசியோதெரபி என்பது சக்தி மற்றும் இயக்கங்கள் (உயிர்-இயக்கவியல் அல்லது நுண்ணுயிரியல்), கையேடு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் எலெக்ட்ரோதெரபி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இது இணைந்த ஆரோக்கியமான மருத்துவ முறை ஆகும். நோயாளிகளின் உடல் பரிசோதனை, நோய் கண்டறிதல், முன்கணிப்பு மற்றும் உடல் பயிற்சி சிகிச்சை மூலம் நோயாளியின் உயிர் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

இயன்முறை மருத்துவம் - கல்வி

தொகு

இயன்முறை சிகிச்சை கல்வி ஒரு மருத்துவ கல்வி ஆகும். இது தசைகள், உடல் திறன் விளையாட்டு, நரம்பியல், காயம் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், இதயவியல் நுரையீரல், வயது மூப்பு, எலும்பியல், பெண்கள் ஆரோக்கியம், மற்றும் சிறுநீரகம் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட தொழில்முறைக் கல்வி. இது குறிப்பாக நரம்பியல் மற்றும் மறுவாழ்வுத் துறையில் வேகமாக வளர்ந்துவரும் சிகிச்சை முறை ஆகும். இயன்முறை மருத்துவத்தை வழங்குபவர் இயன்முறை மருத்துவர் (Physiotherapist or physical therapist) ஆவார்.

இந்தியாவில்

தொகு

இளங்கலைப் படிப்பு:

தொகு

இயன்முறை சிகிச்சை படிப்பைப் படிக்க பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டின் இயற்பியல் வேதியியல் உயிரியல் அல்லது தாவரவியல் & விலங்கியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயன்முறை சிகிச்சை (Physiotherapy) மாணவர்களின் கலந்தாய்வு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் அரசு நடத்துகிறத.நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்:

முதுகலைப் படிப்பு-இரண்டு வருடங்கள்:

தொகு

இயன்முறை சிகிச்சைக்கான எலும்பியல், நரம்பியல், இதயவியல், உடல் திறன் விளையாட்டு, பெண்ணோயியல்

இயன்முறை சிகிச்சைக்கான முனைவருக்கான படிப்பு

தொகு

இது இயன்முறை சிகிச்சை ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் இயன்முறை சிகிச்சை தத்துவப் படிப்பாகும் (ஆங்கிலம்:PhD in PHYSIOTHERAPY). இது இயன்முறை சிகிச்சையைத் வளர்ச்சிக்கும், புதிய தத்துவ முறை உருவாக வழிவகுக்கிறது.

சில பிசியோதெரபி கல்லூரிகள்

தொகு
  • அரசு புனர்வாழ்வளிக்கும் மருத்துவ நிறுவனம், சென்னை.[3]
  • அரசு பிசியோதெரபி கல்லூரி, திருச்சி.
  • ஆதிபராசக்தி பிசியோதெரபி கல்லூரி, மேல்மருவத்தூர்
  • சுவாமி விவேகானந்தா பிசியோதெரபி கல்லூரி, திருச்செங்கோடு.
  • அப்பல்லோ பிசியோதெரபி கல்லூரி,ஹைதராபாத்.[4]
  • ஸ்ரீ ராமகிருஷ்ண பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[5]
  • சேரன் பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[6]
  • விநாயக மிஷன் பிசியோதெரபி கல்லூரி, சேலம்.[7]
  • ஆர்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.
  • பிசியோதெரபி கல்லூரி, அகமதுநகர்.[8]
  • மகாத்மா காந்தி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, கோட்டயம்.[9]
  • கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்.
  • அரசு மருத்துவக் கல்லூரி, நாக்பூர்

புனர்வாழ்வு

தொகு

புனர்வாழ்வு என்பது நோயுற்ற பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சையின் மூலம் உடல், மனது மற்றும் சமூக அடிப்படையில் ஆரோக்கியமான அல்லது சாதாரண வாழ்க்கைக்கு ஒருவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை. இதில் இயன்முறை மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.

மேற்கோள்

தொகு
  1. [http://www. https://www.iapmr.in}
  2. Medicine/what-physical Medicine-is-used-for.html "PM&R". {{cite web}}: Check |url= value (help)
  3. "பிசியோதெரபி கல்லூரிகள்".
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-25.
  5. http://www.sriramakrishnacollegeofphysiotherapy.com/principal-profile.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-25.
  7. https://www.vinayakamission.com/Physiotherapy.php
  8. http://www.paruluniversity.ac.in/faculty/faculty-of-physiotherapy/ahmedabad-physiotherapy-college/
  9. http://sme.edu.in

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடலியக்க_மருத்துவம்&oldid=3858828" இலிருந்து மீள்விக்கப்பட்டது