கிச்சிலி

கிச்சிலி
OrangeBloss wb.jpg
தோடம்பழம் (Citrus × sinensis பயிரிடும்வகை)
உயிரியல் வகைப்பாடு
திணை: பிளான்டேதாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Aurantioideae
சிற்றினம்: சிட்ரே Citreae
பேரினம்: சிட்ரசுCitrus
கரோலஸ் லின்னேயஸ் L.
சிற்றினம் மற்றும் கலப்பினம்

முக்கியச் சிற்றினங்கள்:
Citrus maximaபம்பளிமாசு
Citrus medicaநாரத்தம்
Citrus micranthaPapeda
Citrus reticulataமெண்டரின் தோடம்பழம்


முக்கியக் கலப்பினங்கள்:
Citrus × aurantiifoliaதேசி
Citrus × aurantiumகசப்பு ஆரஞ்சு
Citrus × latifoliaபெரிசிய எலுமிச்சை
Citrus × limonஎலுமிச்சை
Citrus × limoniaRangpur
Citrus × paradisiதிராட்சைப்பழம்
Citrus × sinensisஆரஞ்சு (பழம்)
Citrus × tangerinaTangerine

கிச்சிலி (Citrus) என்பது ரூட்டேசி குடும்ப பூக்கும் மரங்கள் மற்றும் குறுமரங்களடங்கிய பேரினமாகும். இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை,பம்பளிமாசு (பப்ளிமாசு) உள்ளிட்ட முக்கிய பயிர்கள் புளிப்புச் சுவையுள்ள சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன.

சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின் படி சிட்ரசு தாவரங்களின் பூர்வீகம் ஆஸ்திரேலியா, நியூ கலிடோனியா மற்றும் நியூ கினியா ஆகும்[1]. இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின் படி இதன் பூர்வீகம் தென்கிழக்கு ஆசிய எல்லைகளான வடகிழக்கு இந்தியா, பர்மா (மியான்மார்), மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகியவை இதன் பூர்வீகம் என கூறுப்படுகிறது [2][3][4].சில குறிப்பிட்ட வணிகரீதியிலான இனங்களான ஆரஞ்சு, மெண்டரின் தோடம்பழம் (mandarine Orange) மற்றும் எலுமிச்சை இப்பகுதியல் தோன்றியதாகும். பழங்காலத்திலிருந்தே சிட்ரசு பழங்கள் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.

வரலாறுதொகு

பல்வேறு சமயங்களில் சிட்ரசு பழங்கள் ஆசியா (முதன் முதலாகப் பயன்பாட்டில் இருந்தது), ஐரோப்பா மற்றும் புளோரிடா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டதாக அறியப்படகிறது.ஆனால் ஐரோப்பிய ஆரஞ்சுப் பழங்கள் (கசப்பு ஆரஞ்சு) அலெக்சாண்டர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். அதே போல புளோரிடாவின் ஆரஞ்சு வகைகளும் ஸ்பெயினை பூர்வீகமாகக் கொண்டதாகும்.பண்டைய ரோமானிய காலத்தில் எலுமிச்சை ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது.

பெயர்தொகு

இதன் மூலப்பெயர் லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும்.இப்பெயர் தற்போதுள்ள சிட்ரான் (சி. மெடிகா) அல்லது ஒரு ஊசியிலை கூம்பு மரத்தை குறிக்கிறது. இது சிடார் (cedar), κέδρος (kédros) என்ற ஒரு வகை மரத்தைக் குறிக்கும் கிரேக்க சொல்லுக்கும் தொடர்புடையதாகவும் உள்ளது. ஏனெனில் சிடார் மர இலைகள் மற்றும் பழங்களில் எலுமிச்சை போன்றதொரு வாசைனை காணப்படுகிறது. மொத்தத்தில் இவை ரோமானிய சொற்களிலிருந்து பெயரிடப்பட்ட சிட்ரசு பழங்கள் (புளிப்பு பழங்கள்) மற்றும் தாவரங்கள் என அறியப்படுகின்றன.

பரிணாம வளர்ச்சிதொகு

இன்றைய பெரிய சிட்ரசு பழங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் சிறிய, உண்ணத்தக்க சதைக்கனியியிலிருந்து முதலில் உருவானது. சிட்ரசு செடிகள் ஒரு பொதுவான மூதாதையிலிருந்து சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தன.

மேற்கோள்கள்தொகு

  1. Liu, Y.; Heying, E.; Tanumihardjo, S. (2012). "History, Global Distribution, and Nutritional Importance of Citrus Fruits". Comprehensive Reviews in Food Science and Food Safety 11: 6. doi:10.1111/j.1541-4337.2012.00201.x. 
  2. Gmitter, Frederick; Hu, Xulan (1990). "The possible role of Yunnan, China, in the origin of contemporary Citrus species (Rutaceae)". Economic Botany 44 (2): 267–277. doi:10.1007/bf02860491. http://www.springerlink.com/content/vp0u360m6471488t. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. United Nations Conference on Trade and Development. Market Information in the Commodities Area: Citrus fruits [1] பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்
  4. Scora, Rainer W. (1975). "On the history and origin of citrus". Bulletin of the Torrey Botanical Club 102 (6): 369–375. doi:10.2307/2484763. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சிலி&oldid=3355849" இருந்து மீள்விக்கப்பட்டது