சேர தாண்டவம் (நாடகம்)

சேர தாண்டவம் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் ஆட்டனத்தி, ஆதிமந்தி இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பரணர், வெள்ளிவீதியார் முதலானோர் பாடிய அகநானூற்றுப் பாடல்கள், ஆதிமந்தியே பாடியுள்ள குறுந்தொகைப் பாடல், இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.[1]


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர_தாண்டவம்_(நாடகம்)&oldid=1894652" இலிருந்து மீள்விக்கப்பட்டது