சேலம் மாநகரத் தந்தைகள் பட்டியல்
சேலம் மாநகரத் தந்தை (Mayor of Salem) என்பவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாநகரின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பதவிக்குரியவரான இவர் சேலம் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நகரத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறார்.[1]
சேலம் மாநகரத் தந்தை Mayor of Salem | |
---|---|
தற்போது ஆ. இராமச்சந்திரன் | |
Type | நகராட்சி ஆணையம் |
பதவி | பதவியில் |
அலுவலகம் | பிரெட்சு சாலை, சேலம் |
நியமிப்பவர் | சேலம் தேர்தல் பிரிவு |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | G.சூடாமணி |
உருவாக்கம் | 1996 |
இணையதளம் | Mayor of Salem |
2006-ஆம் ஆண்டு மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை நீக்கப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 ஆம் ஆண்டு நேரடித் தேர்தல் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.[2]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தொடர்ச்சியான தாமதம் ஏற்பட்டமையால் மாநிலத்தில் உள்ள மற்ற மேயர்களைப் போலவே சேலம் மேயர் பதவியும் 25 அக்டோபர் 2016 முதல் 4 மார்ச் 2022 வரை காலியாக இருந்தது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஆ. இராமச்சந்திரன், சேலத்தின் ஆறாவது மேயராக 4 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[3]
நகரத் தந்தைகள் பட்டியல்
தொகுவ. எண் | உருவப்படம் | பெயர் | தேர்வான கோட்டம் | அரசியல் கட்சி | பதவிக் காலம் | மாமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | G. சூடாமணி | திராவிட முன்னேற்றக் கழகம் | 25 அக்டோபர் 1996 | 2001 | 1ஆவது
(5 ஆண்டுகள், 0 நாட்கள்) |
1ஆவது | ||
2 | இரா. சுரேசு குமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 2001 | 2006 | 1ஆவது
(5 ஆண்டுகள், 0 நாட்கள்) |
2ஆவது | ||
3 | எசு.சவுண்டப்பன் | 2006 | 27 அக்டோபர் 2006 | 1ஆவது
(0 ஆண்டுகள், 331 நாட்கள்) | ||||
4 | ஜெ. ரேகா பிரியதர்சினி | மக்களால் நேரடியாகத் தேர்வு | திராவிட முன்னேற்றக் கழகம் | 28 அக்டோபர் 2006 | 24 அக்டோபர் 2011 | 1ஆவது
(4 ஆண்டுகள், 361 நாட்கள்) |
3ஆவது | |
5 | எசு.சவுண்டப்பன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 25 அக்டோபர் 2011 | 24 அக்டோபர் 2016 | 2ஆவது
(4 ஆண்டுகள், 365 நாட்கள்) |
4ஆவது | ||
மாமன்றமும் மேயர் பதவியும் இல்லை (25 அக்டோபர் 2016 – 2 மார்ச் 2022) | ||||||||
6 | ஆ. இராமச்சந்திரன் | 6 | திராவிட முன்னேற்றக் கழகம் | 4 மார்ச் 2022 | பதவியில் | 1ஆவது
(2 ஆண்டுகள், 296 நாட்கள்) |
5ஆவது |
மேற்கோள்கள்
தொகு- ↑ இளங்கோவன்,க .தனசேகரன், நவீன். "உள்ளாட்சி ரேஸ்: அனல் பறக்கும் `எடப்பாடி vs கே.என் நேரு'... சேலம் மாநகராட்சியை கைப்பற்றுமா திமுக?!". Vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ "In next local poll, mayors will be elected directly by people". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). 21 July 2011 இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202164702/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-21/chennai/29799406_1_mayor-election-local-body-direct-elections. பார்த்த நாள்: 2014-01-24.
- ↑ "சேலம் மேயராக ஆ.ராமச்சந்திரன் தேர்வு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.