சே. ப. இராமசுவாமி ஐயர் அறக்கட்டளை

சி. பி. இராமசுவாமி ஐயர் அறக்கட்டளை (C. P. Ramaswami Aiyar Foundation) என்பது வழக்கறிஞர் சே. ப. இராமசுவாமி ஐயரின் விருப்பப்படி 14 அக்டோபர் 1966-இல் நிறுவப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அறக்கட்டளையின் தலைமையகம் இந்தியாவின் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை (சே. ப. இராமசாமி சாலை என்றும் அழைக்கப்படுகிறது) செ. ப. இராமசுவாமி ஐயர் குடும்பத்திற்குச் சொந்தமான "தி க்ரோவ்" என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக (2015 இல்) இக்குடும்பத்தைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா உள்ளார்.[1]

செயல்பாடுகள்

தொகு

கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சமூகத்திற்குப் பங்களிக்கும் பல நிறுவனங்களை இந்த அறக்கட்டளை நடத்துகிறது. இதில் அடங்கும் நிறுவனங்கள்:[1]

  1. சே. ப. இராமசுவாமி ஐயர் இந்தியவியல் ஆய்வு நிறுவனம். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்த நிறுவனம், முனைவர் பட்டம் பெறுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையமாகும்.
  2. சே. ப. இராமசுவாமி ஐயர் சுற்றுச்சூழல் கல்வி மையம். இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் சிறந்த மையம்.
  3. குழந்தைகளுக்கான சரசுவதி கேந்திரா கற்றல் மையம், சென்னையில் உள்ள குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான கற்றல் மையம்
  4. காஞ்சிபுரம், சகுந்தலா ஜெகநாதன் நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம்
  5. சே. ப. இராமசுவாமி ஐயர் கலை மையம்
  6. சென்னை, குரோவ் பள்ளி
  7. காஞ்சிபுரம், இரங்கம்மாள் வித்யாலயா பெண்கள் பள்ளி
  8. கும்பகோணம், சர். சே. ப. இராமசுவாமி ஐயர் நினைவுப் பள்ளி.

மேற்கோள்கள்

தொகு