சைதி நருலா (Chaiti Narula) ஓர் இந்திய பத்திரிகையாளர் மற்றும் செய்தி தொகுப்பாளர் ஆவார். இவர் தற்போது இந்தியா டுடேயில் துணை ஆசிரியராக உள்ளார், வணிகம், அரசியல் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார். [1] [2] ஏப்ரல், 2021 இல், ENBA 2020 ஆல் டிஜிட்டல் செய்திகளில் சிறந்த தொகுப்பாளருக்கான விருதினை வென்றார். [3]

சைதி நருலா
பணிபத்திரிகையாளர் ,செய்தி தொகுப்பாளர்
பணியகம்இந்தியா டுடே குழுமம்

தொழில் வாழ்க்கை

தொகு

சைதி நருலா இந்தியா டுடேயில் 2019 ஜனவரியில் துணை ஆசிரியர், பகல்நேர தொகுப்பாளராகவும், பிஸ் டாக், டெய்லிஓ மற்றும் பிசினஸ் டுடே ஆகியவற்றில் பங்களிப்பாளராகவும் சேர்ந்தார். முன்னதாக நருலா 2017 முதல் சி.என்.என்-நியூஸ் 18 இல் காலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். இவர் முன்பு அர்னாப் கோஸ்வாமியுடன் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். [4] நருலா தனது கல்லூரிக் காலத்தின் போது டி.என்.ஏவில் பத்திரிகையாளராக பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார்.

சைதி நருலா தனது எழுத்தின் மூலம் உளச்சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றுகிறார். சமூக ஊடகங்கள் மற்றும் மாஸ்டர் வகுப்புகள் மூலம் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் இவர் மனநல ஆலோசகர்களுக்கு வழிகாட்டுகிறார். [5] [6] இவர் ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களளின் பங்களிப்பாளராகவும் உள்ளார். [7]

சைட்டி நருலா ET Now க்கான சந்தைகள் மற்றும் வணிக அறிவிப்பாளராக பணியாற்றினார். 'டீ டைம் வித் சைட்டி நருலா' நிகழ்ச்சிக்காக இவர் பரவலாக அறியப்பட்டார், அங்கு இவர் கோல்ஃப் விளையாட்டின் போது தலைமை நிர்வாக அதிகாரிகளை நேகாணல் செய்துள்ளார். [8]

சான்றுகள்

தொகு
  1. "Chaiti Narula joins India Today as Deputy Editor and News Anchor - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  2. "Chaiti Narula". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  3. "enba 2020: India Today, ABP, Aaj Tak, Times Now take home top honours - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  4. Staff, J. K. R. (2017-05-15). "Republic TV anchor and business reporter Chaiti Narula quits channel". Janta Ka Reporter 2.0 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  5. "Young Mental Health Advocates | Fortis Healthcare". www.fortishealthcare.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  6. "Reporters Project: Why India Is Facing A Mental Health Crisis". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-21.
  7. "Travel Makes Me A Better Human Being: Chaiti Narula, Journalist - SheThePeople TV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  8. "Tee Time | Timesnetwork" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதி_நருலா&oldid=3411057" இலிருந்து மீள்விக்கப்பட்டது