அர்ணாப் கோஸ்வாமி
அர்ணாப் கோஸ்வாமி (அசாமிய மொழி: অৰ্ণৱ গোস্বামী) ஓர் இந்திய ஊடகவியலாளர் மற்றும் இந்திய செய்தி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்-ல் முதன்மை செய்தி ஆசிரியர் (Editor-in-Chief) ஆவார்[1][2]. நியூஸ் ஹவர் என்கிற பெயரில் இவர் தொகுத்து வழங்கும் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி வாரநாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்துடன் இவர் ஃப்ராங்க்லி ஸ்பீக்கிங் வித் அர்ணாப் (Frankly Speaking with Arnab) என்கிற பெயரில் சிறப்பு நபர்களைக் கொண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் [3][4]. தன்னுடைய ஊடக ஆளுமைத்தன்மைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் காம்பேட்டிங் டெரரிசம்: தி லீகல் சேலஞ்ச் (Combating Terrorism: The Legal Challenge) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
அர்ணாப் கோஸ்வாமி | |
---|---|
விக்கி கருத்தரங்கு 2011-ல் அர்ணாப் கோஸ்வாமி | |
பிறப்பு | 9 அக்டோபர் 1973 குவஹாத்தி, அஸ்ஸாம் |
கல்வி | இந்து கல்லூரி, டெல்லிப் பல்கலைக்கழகம் புனித அந்தோணியார் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு |
பணி | டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் முதன்மை செய்தி ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1998 – தற்போதுவரை |
தொலைக்காட்சி | தி நியூஸ்ஹவர்(The Newshour), டைம்ஸ் நவ் |
குடும்பமும் கல்வியும்
தொகுஇவரது குடும்பம் அசாமின் பார்பேட்டா மாவட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். அங்கிருந்து சில்லாங் வந்து பின் குவகாத்தியில் குடியேறினார்கள். இவரின் தந்தை வழி பாட்டனார் ரஞ்சனி கன்டா கோசுவாமி குவகாத்தி உயர் நீதிமன்றத்தில் [5] வழக்குரைநர். அர்ணாபின் பெரியப்பா தினேசு கோசுவாமி அரசியல்வாதி. வி. பி. சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார்[5], அர்ணாபின் தந்தை மனோரஞ்சன் தில்லி பொறியியல் கல்லூரியில் படித்து இராணுவத்தில் பணியில் சேர்ந்தார். பணி காரணமாக அடிக்கடி இடம்மாற வேண்டி இருந்ததால் அர்ணாபின் பள்ளி கல்வி பல ஊர்களில் தொடர்ந்தது.[5]
அர்ணாபின் அக்கா மருத்துவராக பெங்களூருவில் வசிக்கிறார். அர்ணாபின் தாய் வழி பாட்டனார் கௌரிசங்கர் பட்டாச்சாரியா தீவிர பொதுவுடமைவாதி. அர்ணாப் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலை பட்டம் பெற்று பின் பிரித்தனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் சமூகமானிடவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[5]
தொழில்
தொகுஇலண்டனில் இருந்து வந்ததும் 1994இல் தி டெலிகிராப் இதழில் பணியில் சேர்ந்தார். அதற்கு இலண்டனில் பழக்கமான அவரின் நண்பர் சுரஞ்சன் தாசு உதவினார்.[5] 1995-இல் என்டிடிவியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவர் ராஜ்தீப் தேசாயிக்குக் கீழ் பணியாற்றினார். ஏப்பிரல் 2004இல் அங்கிருந்து விலகி டைம்சு நவ் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தார்.[5] பின்னர் அர்ணாப் கோசுவாமி 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் டைம்ஸ் நவ் மற்றும் ஈ.டி.நவ் ஆகிய தொலைக்காட்சிகளின் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6]
ரிபப்ளிக் தொலைக்காட்சி
தொகுஅர்னாப் கோஸ்வாமி, 6 மே 2017 அன்று துவக்கப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும், அதன் பெரும் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.[7]
தற்கொலைக்கு தூண்டிய வழக்கு
தொகுகோஸ்வாமி 2020 நவம்பர் 4 ஆம் தேதி அன்வே நாயக்கின் தற்கொலை வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பிரிவு 34 இன் கீழ் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[8][9][10] நாயக் தனது தற்கொலைக் குறிப்பில் கோஸ்வாமி உட்பட மூன்று நபர்கள் தான் செய்த பணிக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.[11] அர்னாப் கோஸ்வாமி 2020 நவம்பர் 11 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.[12][13][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.guardian.co.uk/world/2008/dec/12/mumbai-arundhati-roy
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-29.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Rahul-Gandhis-first-interview-Full-text/articleshow/29455665.cms
- ↑ http://blogs.wsj.com/indiarealtime/2014/01/27/the-gandhi-goswami-smackdown/
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Fast and Furious - The turbulent reign of Arnab Goswami". RAHUL BHATIA. caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2014.
- ↑ http://www.thehindu.com/business/Industry/arnab-goswami-quits-times-now/article9291555.ece
- ↑ "Arnab Goswami has announced his new venture ‘Republic’". The Indian Express. http://indianexpress.com/article/trending/trending-in-india/arnab-goswami-has-announced-his-new-venture-republic-and-twitteratis-having-a-having-a-field-day-4429941/.
- ↑ "Republic TV Editor-in-Chief Arnab Goswami arrested in 2018 suicide case" (in en). Zee News. 4 November 2020. https://zeenews.india.com/india/republic-tv-editor-in-chief-arnab-goswami-arrested-by-mumbai-police-2322333.html.
- ↑ "Republic TV Editor Arnab Goswami Arrested by Mumbai Police in 2018 Abetment to Suicide Case" (in en). News18. 4 November 2020. https://www.news18.com/news/india/republic-tv-editor-arnab-goswami-arrested-by-mumbai-police-in-2018-abetment-to-suicide-case-3040157.html.
- ↑ "Republic TV Chief Arnab Goswami Arrested; Top BJP Ministers Cry Foul" (in en). HuffPost India. 4 November 2020. https://www.huffingtonpost.in/entry/republic-tv-chief-arnab-goswami-arrested-by-maharashtra-police_in_5fa21f15c5b6128c6b5dcddc.
- ↑ Dutta, Amrita Nayak (4 November 2020). "This is the 2018 suicide abetment case behind Arnab Goswami's arrest". ThePrint. https://theprint.in/india/this-is-the-2018-suicide-abetment-case-behind-arnab-goswamis-arrest/537007/. பார்த்த நாள்: 4 November 2020.
- ↑ Vaidyanathan, A.; Ghosh, Deepshikha (11 November 2020). "TV Anchor Arnab Goswami Gets Interim Bail From Supreme Court In Abetment To Suicide Case". https://www.ndtv.com/india-news/tv-anchor-arnab-goswami-granted-bail-by-supreme-court-in-abetment-to-suicide-case-2323856. பார்த்த நாள்: 11 November 2020.
- ↑ "SC orders release of Arnab Goswami on interim bail, says ‘personal liberty must be upheld’" (in en). The Indian Express. 11 November 2020. https://indianexpress.com/article/india/arnab-goswami-abetment-to-suicide-case-bail-plea-supreme-court-7047373/. பார்த்த நாள்: 11 November 2020.
- ↑ "Supreme Court Orders Arnab Goswami's Release on Interim Bail". The Wire. 11 November 2020. https://thewire.in/law/supreme-court-arnab-goswami-bail-hearing.