சைன் டாம் சாக்கோ
சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) (பிறப்பு செப்டம்பர் 15,1983) ஓர் இந்திய நடிகரும் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்த முன்னாள் உதவி இயக்குநரும் ஆவார்.[2] இயக்குநர் கமலின் உதவியாளராக சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடமா படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.[3][4] ஈ அதுத காலத்து, அத்தியாயம், ஆனையும் ரசூலும், மசாலா ரிபப்ளிக், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (தமிழ்) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மேலும் பினு சதானந்தனின் நகைச்சுவை திரைப்படமான இதிஹாசா (2014) படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[5]
சைன் டாம் சாக்கோ | |
---|---|
பிறப்பு | 15 செப்டம்பர் 1983 திருச்சூர், கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தாமஸ் கல்லூரி, திருச்சூர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | தபீதா |
பிள்ளைகள் | 1[1] |
விவேகானந்தன் விரலானு இவரது 100 வது படமாகும்.[6]
பிற மொழிப்படங்கள்
தொகுவிஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் என்ற அதிரடித் திரைப்படத்தின் மூலம் சைன் தமிழில் அறிமுகமானார்.[7][8]
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த தசரா என்ற பத்தின் மூலம் சைன் தெலுங்கிலும் அறிமுகமானார்.
சர்ச்சை
தொகு31 ஜனவரி 2015 அன்று, சைன் டாம் சாக்கோ மற்றும் நான்கு பெண்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி கொச்சியில் கைது செய்யப்பட்டனர்.[9] இவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "I strive to overcome the trauma-of my past Shine Tom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "Shine Tom Chacko: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes" இம் மூலத்தில் இருந்து 17 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190617101632/https://timesofindia.indiatimes.com/topic/Shine-Tom-Chacko.
- ↑ "Shine Tom assisted Kamal for 9 years! – Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711100610/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/did-you-know/Shine-Tom-assisted-Kamal-for-9-years/articleshow/46332291.cms.
- ↑ Webdesk (16 July 2015). "Shine Tom Chacko about Mohanlal and Mammootty". onlookersmedia (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "Shine Tom Chacko talks about his future set of projects". Behindwoods. 21 March 2018. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "ഷൈൻ ടോം ചാക്കോയുടെ നൂറാമത് ചിത്രം; 'വിവേകാനന്ദന് വൈറലാണ്' തിയേറ്ററുകളിലേക്ക്". Reporter TV. 10 January 2024. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ "Popular Malayalam actor Shine Tom Chacko joins 'Thalapathy 65' – Times of India ►". The Times of India இம் மூலத்தில் இருந்து 5 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210505183524/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/popular-malayalam-actor-shine-tom-chacko-joins-thalapathy-65/articleshow/82401189.cms.
- ↑ "Nelson Dilipkumar reveals why he enjoyed shooting for 'Beast' the most". The Times of India. 4 September 2023.
The film was a commercial success and made more than Rs 300 crore at the box office.
- ↑ "Malayalam actor Chacko among 5 held on drug charge in Kochi". தி இந்து (in ஆங்கிலம்). 31 January 2015. Archived from the original on 13 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2019.
- ↑ "Asianet-Breaking News |Kerala Local News |Kerala Latest News | Kerala Breaking News|News". Asianet.in. Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "ഞാന് വീണത് മറ്റാര്ക്കോ വെച്ച വലയിലായിരിക്കാം; മനസ്സു തുറന്ന് ഷൈന് ടോം ചാക്കോ". Mathrubhumi (in ஆங்கிலம்). 3 July 2019. Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.