சையத் உசைன் சாகிர்

சையத் உசைன் சாகிர் (Syed Husain Zaheer) ஒர் இந்திய [1] வேதியியலாளர் ஆவார். நாட்டின் பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்| அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின்]] பொது இயக்குநராகவும் ஒர் அரசியல்வாதியாகவும் பணிபுரிந்தார். பொது இயக்குனராக பதவியேற்பதற்கு முன்னர் அந்நிறுவனத்தின் ஒரு பிரிவாக இயங்கிக் கொண்டிருந்த இந்திய வேதித்தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். இப்பணிக்காலத்தில் அங்கு உயிர்வேதியியல் துறை [2] என்ற ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கான்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைமைப் பொறுப்பு வகித்தார் [3]. இவருடைய அறிவியல் தொண்டை பாராட்டும் விதமாக, நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை 1972 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது [4]

சையத் உசைன் சாகிர்
பிறப்புஇந்தியா
பணிவேதியியலர்
அரசியல்வாதி
விருதுகள்பத்ம பூசண்

மேற்கோள்கள்

தொகு
  1. "About the Foundation". Zaheer Foundation. 2016. Archived from the original on ஏப்ரல் 8, 2016. பார்க்கப்பட்ட நாள் April 12, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. D. P. Burma (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. pp. 152–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3220-5.
  3. Prof. S P Mehrotra (10 November 2015). The Fourth IIT: History of IIT Kanpur. Penguin Books Limited. pp. 218–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5214-192-0.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_உசைன்_சாகிர்&oldid=3930318" இலிருந்து மீள்விக்கப்பட்டது