சைர்டோடாக்டைலசு இருளாரம்

சைர்டோடாக்டைலசு இருளாரம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைர்டோடாக்டைலசு
இனம்:
சை. இருளாரம்
இருசொற் பெயரீடு
சைர்டோடாக்டைலசு இருளாரம்
அகர்வால், தாக்கரே & கந்தேகர், 2023[1]

சைர்டோடாக்டைலசு இருளாரம் (Cyrtodactylus irulaorum) இருளர் மரப்பல்லி என்பது மரப்பல்லி பேரினத்தினைச் சார்ந்த சிறிய சிற்றினமாகும்.[1][2] இது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][3] இது சுமார் 5.1 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இதன் மொத்த நீளம் 8.3 செமீ (3 இல்) ஆகும்.[1] இது ரெலிக்ட் மரப்பல்லியினைப் போலவே, வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் நிறம் அடர் பழுப்பு நிறமாக மாறலாம்.

சொற்பிறப்பியல்

தொகு

"தென்னிந்தியாவின் பாம்பு மக்கள்" என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் இருளர் மக்களின் பெயர் இப்பல்லிக்கு இடப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Ishan Agarwal; Tejas Thackeray; Akshay Khandekar (May 2023). "Two new spotted species of the Cyrtodactylus (Geckoella) collegalensis (Beddome, 1870) complex from the south-eastern coast of India (Reptilia: Squamata)". Vertebrate Zoology 73: 475–498. doi:10.3897/vz.73.e102602. 
  2. 2.0 2.1 Cyrtodactylus irulaorum at the Reptarium.cz Reptile Database
  3. "Thackeray foundation students find two new Geckoella species". The Times of India. 2023-05-18. https://timesofindia.indiatimes.com/city/kolhapur/thackeray-foundation-students-find-two-new-geckoella-species/articleshow/100317381.cms.