சைலினால் ஆரஞ்சு
சைலினால் ஆரஞ்சு (Xylenol orange) என்பது C31H32N2O13S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் வினைப்பொருளாகும். பொதுவாக உலோகங்களை தரம்பார்க்கும் ஆய்வுகளில் நிலைகாட்டியாகச் செயல்படும் டெட்ராசோடியம் உப்பாக இவ்வினைப்பொருள் பயன்படுகிறது. உலோகங்கள் தரம்பார்க்கப்படும் போது தரம் காணும் கரைசலில் சிவப்பாக காணப்படும் சைலினால் ஆரஞ்சு முடிவுப் புள்ளியில் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. முற்காலத்தில் வர்த்தகமுறையில் தயாரிக்கப்பட்ட சைலினால் ஆரஞ்சு முற்றிலுமாக தூய்மையற்றதாகும் [1]. சில சமயங்களில் 20% தூய்மையுடன் கிடைத்தது. அரை-சைலினால் ஆரஞ்சும், இமினோடையசிட்டிக் அமிலமும் இதில் மாசுக்களாக கலந்திருந்தன. 90% தூய்மையான சைலினால் ஆரஞ்சு தற்பொழுது கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,3′-பிசு[என்,என்-பிசு(கார்பாக்சிமெத்தில்)அமினோமெத்தில்]-
| |
இனங்காட்டிகள் | |
1611-35-4 3618-43-7 (டெட்ராசோடியம் உப்பு) | |
ChemSpider | 65838 |
EC number | 216-553-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73041 |
| |
பண்புகள் | |
C31H32N2O13S | |
வாய்ப்பாட்டு எடை | 672.66 g·mol−1 |
உருகுநிலை | 195 °C (383 °F; 468 K) |
200 mg/mL | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R10, R20, R21, R22, R36, R38 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S27, S28, S62, S63 |
தீப்பற்றும் வெப்பநிலை | > 93 °C (199 °F; 366 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gay, Craig; Collins, James; Gebicki, Janusz M. (1999), "Determination of Iron in Solutions with the Ferric–Xylenol Orange Complex", Analytical Biochemistry, 273 (2): 143–148, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1006/abio.1999.4207