சைவ உணவுமுறைச் சங்கம்

ஐக்கிய இராச்சியத்தின் சைவ உணவுமுறைச் சங்கம் (ஆங்கில மொழி: Vegetarian Society of the United Kingdom [VSUK]) என்பது உணவுமுறை மாற்றங்களுக்காக பிரச்சாரம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஆகும்.[1] சைவ மற்றும் நனிசைவ உணவு வகைகளுக்கான வர்த்தக முத்திரைகளை அங்கீகரித்தல், ஒரு சமையல் பள்ளி மற்றும் லாட்டரியை நடத்துதல், மற்றும் இங்கிலாந்தில் தேசிய சைவ உணவுமுறை வாரத்தையும் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை சைவ உணவுமுறைச் சங்கத்தின் பிராதன செயற்பாடுகளாகும்.

சைவ உணவுமுறைச் சங்கம்
ஐக்கிய இராச்சிய சைவ உணவுமுறைச் சங்கம்
சுருக்கம்VSUK
உருவாக்கம்30 செப்டம்பர் 1847; 177 ஆண்டுகள் முன்னர் (1847-09-30)
நிறுவப்பட்ட இடம்ராம்ஸ்கேட், கென்ட், இங்கிலாந்து
ஒன்றிணைந்தது
  • இலண்டன் சைவ உணவுமுறைச் சங்கம்
  • மான்செஸ்டர் சைவ உணவுமுறைச் சங்கம்
வகைதொண்டு நிறுவனம்
பதிவு எண்259358
சட்ட நிலைதொண்டாற்றல்
நோக்கம்சைவ உணவுமுறை
தலைமையகம்மான்செஸ்டர், இங்கிலாந்து
சேவை
ஐக்கிய இராச்சியம்
உறுப்பினர்கள் (2023)
6,500[1]
தலைவர் (CEO)
ரிச்சர்டு மெக்கில்வெயின்[2]
மைய அமைப்பு
தி பாட் (The Pod)
வருவாய் (2023)
£1,081,545[3]
செலவுகள் (2023)£1,426,451[3]
பணிக்குழாம் (2023)
18[3]
வலைத்தளம்vegsoc.org
சைவ உணவுமுறைச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது
படிமம்:Vegetarian Society approved logo.png
நடைமுறையிலுள்ள இடம்உலகளாவிய
நடைமுறைக்கு வந்த நாள்
  • 1969; 56 ஆண்டுகளுக்கு முன்னர் (1969) (சைவம் உணவுமுறை)
  • 2017; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2017) (நனிசைவம்)
இணையதளம்vegsoc.org/trademarks

19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள பல்வேறு குழுக்கள் இறைச்சியைத் தவிர்த்த உணவுகளை ஊக்குவிக்கத் துவங்கின. இதுவே 1847-ல் சைவ உணவுமுறைச் சங்கத்தை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் இது 1888-ல் மான்செஸ்டர் மற்றும் லண்டன் சைவ உணவுச் சங்கங்களாகப் பிரிந்து, 1969-ல் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து தன் செயற்பாடுகளைத் தொடர்ந்தது. பொதுக் கல்வி மற்றும் உணவு உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்தல் ஆகியவை மூலம் இச்சங்கம் சைவ உணவுமுறையைப் பரப்பி வருகிறது.

இவற்றையும் காண்க

தொகு

தரவுகள்

தொகு
  1. 1.0 1.1 "The Vegetarian Society of the United Kingdom Limited Group Annual Report and Financial Statements Year ended 31 March 2023". Register of charities. Charity Commission for England and Wales. பார்க்கப்பட்ட நாள் 2024-07-22.
  2. Whelan, Dan (2024). "Vegetarian Society picks permanent Manchester home". North West Place (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on January 16, 2024.
  3. 3.0 3.1 3.2 "THE VEGETARIAN SOCIETY OF THE UNITED KINGDOM LIMITED - Charity 259358". Register of charities (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Charity Commission for England and Wales. பார்க்கப்பட்ட நாள் 2024-07-22.

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_உணவுமுறைச்_சங்கம்&oldid=4182086" இலிருந்து மீள்விக்கப்பட்டது